நாட்டின் முதல்நிலை பூப்பந்து ஆட்டக்காரரான லீ சொங் வேய்க்குத் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைக் கொடுத்தவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அல்ல என்பது தெளிவாகி விட்டதால் இப்போது அனைவரின் கவனமும் இன்னொருவர்மீது திரும்பியுள்ளது.
அவர்தான் ஒங் ஈ நா(படத்தில் இடப்பக்கம் இருப்பவர்). ஒங் மசீச முன்னாள் தலைவரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் செக்-கின் மனைவியாவார்.
ஆனால், அவரும் அதில் தமக்கு எவ்வித தொடர்புமில்லை என்று மறுக்கிறார்.
லீ நெருக்கமான நண்பர், அடிக்கடி அவருடன் பூப்பந்து ஆடுவதுண்டு என்பதை ஒங் ஈ நா ஒப்புக்கொண்டார். ஆனால், அவருக்கு ஊக்கமருந்தைக் கொடுத்ததில்லை என்றவர் மறுத்ததாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லீக்கு ஒரு விஐபி-இன் மனைவிதான் ஊக்கமருந்துகளைக் கொடுத்து வந்ததாக அனைத்துலக பெட்மிண்டன் சம்மேளனம் அதன் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது. ஆனால், அவரின் பெயரை வெளியிடவில்லை.
கிழிந்தது நமது விளையாட்டு துறை ! இங்கேயும் ரோஸ்மா அக்காவா ?
ரோஸ்.. தான் அந்த மருந்தை கொடுத்தது
ரோஸ் எல்லாம் இடத்திலும் இருக்கா.. நாசமா போச்சு