மே தினம் 2015

 

 

 

maydayமே தினம் நல்வாழ்த்துகள்

மலேசிய தொழிலாளர்கள் மற்றும் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும்

செம்பருத்தி.கோம் அதன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

தொழிலாளர் தினமான இன்று மலேசிய தொழிலாளர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மலேசிய தொழிற்சங்க இயக்கம் முன்னேற்றம் காணவில்லை. 1948 ஆம் ஆண்டில், எஸ். எ. கணபதியின் தலைமையில் இயங்கிய அகிலGanapathy-sa மலாயா தொழிற்சங்க சம்மேளத்தில் மலாயாவின் மொத்த தொழிலாளர்களில் 66 விழுக்காட்டினர் உறுப்பினர்களாக இருந்தனர். பிரிட்டீஷ்காரர்களால் உருவாக்கப்பட்டு பி.பி. நாராயணன் தலைமையில் இயங்கிய எம்டியுசி (மலாயன் தொழிற்சங்க காங்கிரஸ்) 10 விழுக்காடு தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்டிருந்தது.

இன்று, மலேசியாவில் 12.5 மில்லியன் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வெறும் 6.5 விழுக்காடு தொழிலாளர்களை மட்டுமே அங்கத்தினர்களாக கொண்டுள்ளது.

தொழிலாளர்கள் பலவீனமானவர்களாக இருக்க வேண்டும் என்பது முதலாளிகளின் கொள்கை. அதனை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாக இருந்து வருவது உலகமறிந்த உண்மை. இதனை இந்நாட்டில் நாம் அன்றாடம் காண்கிறோம்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கான முதலாளிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் கொள்கையை, திட்டங்களை முறியடித்து, வெற்றி பெற தொழிலாளர் இனம் அதன் ஒரே ஆயுதமான தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

மலேசிய தொழிற்சங்ககங்களும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசும் அவற்றின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.