புத்தகக் கண்காட்சியில் உள்துறை அமைச்சு நூல்களைப் பறிமுதல் செய்தது

booksஉள்துறை  அமைச்சு  நேற்று, கோலாலும்பூர்  அனைத்துலக  புத்தகக் கண்காட்சியில் கெராக்புடாயா  வெளியீட்டகத்திடமிருந்து  30 நூல்களைப் பறிமுதல்   செய்தது.

பறிமுதல்  செய்யப்பட்ட  நூல்களில்  சில, சந்தையில் பல  ஆண்டுகளாகவே இருந்து  வருவதாகவும்   வெளிப்படையாகவே  விற்பனை  செய்யப்பட்டு  வருவதாகவும்  கெராக்புடாயாவின் ஒருங்கிணைப்பாளர் இங்  யாப்  ஹுவா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அதிகாரிகள்  குர்ஆன்  பிரதிகள் பலவற்றையும்  எடுத்துச்  சென்றார்கள்.

“அதை  விற்பதற்கு  எங்களிடம்  தனி  அனுமதி  இல்லையாம்”, என்றவர்  சொன்னார்.

உள்துறை  அமைச்சு  பறிமுதல்  செய்த  நூல்களின்  பட்டியல்:

Money Logging: On the Trail of the Asian Timber Mafia;
Shi’ite Islam;
Hinduisme Agama Tauhid Terawal (Hinduism, The Earliest Religion);
Mengenali Allah Melalui Agama Purba (Getting to Know Allah Through Ancient Religions);
Marx, Sang Pendidik Revolusioner (Marx, The Revolutionary Educator); and
Hidup Bagaikan Sungai Mengalir (Life Like A Flowing River)

‘Money Logging’  சரவாக்கின் வெட்டுமரத்  தொழில்  ஊழலை  விவரிக்கிறது. ‘Hidup Bagaikan Sungai Mengalir’ விடுதலை  இயக்கத்தில்  ஈடுபட்ட  பெண்களின் வரலாற்றைக் கூறும்  நூல்.

“பல  ஆண்டுகளாக  ‘Hidup Bagaikan Sungai Mengalir’-ஐ  விற்று  வருகிறோம். பிரச்னை  இருந்ததில்லை. மலாய்  கம்முனிஸ்டுகள்  பற்றி  மற்ற  நூல்களும்கூட  இருந்தன. அவற்றை அவர்கள்  தொடவில்லை.

“சுற்றிப் பார்த்து (பிரச்னைக்குரியவை  என்று  நினைத்த)  நூல்களை  எடுத்துச்  சென்றனர்”, என  இங்  கூறினார்.