போலீசிடம் தப்பி ஓடுபவர் அரசியல்வாதிகளுடன் ‘தோள் உரசுகிறார்’

ufanயுபுன் நிறுவனத்தின்  தலைவர்  தாய் கிம்  லெங்,  தாய்லந்து  போலீசாரால்  தேடப்படும்  ஒரு  நபராக  இருக்கலாம்  அனால், மலேசியாவில்  அவர்  ஒரு  பெரிய  ஆள்.

தாய்லாந்தில் அவரைப்  பிடிப்பதற்கு  கைது  ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘டத்தோ  டேனியல்  தாய்’  என்று  தம்மை  அழைத்துக்கொள்ளும்  அவர், முன்னாள்  மசீச  தலைவர்  ஒங்  தி  கியாட்,  சிலாங்கூர்  ஆட்சிக்  குழு  உறுப்பினர்  வி.கணபதி  ராவ்  போன்றோர்  கலந்துகொள்ளும்  நிகழ்வுகளில்  எப்படியோ  கலந்துகொள்கிறார்.

யுபுன் நிறுவனம்  அதன்  நேரடி  விற்பனை  திட்டத்தின்  மூலமும்  இலக்கவியல் நாணய முறையின்  மூலமாகவும் சுமார்  120,000 பேர்ரிடமிருந்து ரிம4.1 பில்லியனை (38 பில்லியன் பாஹ்ட்) ஏமாற்றியிருக்கிறது  என  தாய்லாந்து  போலீசார் மதிப்படுவதாக த பெங்கோக்  போஸ்ட்  கூறியுள்ளது.

மலேசியாவில்  முக்கியமான  நிகழ்ச்சிகளுக்கு தாய்  அழைக்கப்படுகிறார். ஆறு இலக்க  தொகைகளைத்  தாராளமாக  அள்ளிக்  கொடுக்கிறார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை டிஏபி-இன்  கணபதி  ராவ்  தலமையேற்ற  கேட்வே கிளாங் நிகழ்வு  ஒன்றில்  தாயும்  ஒரு  பேச்சாளர். மறுநாள்  கெந்திங்  மலையில்  ஒரு  நிகழ்வில் தாய்  கலந்துகொண்டு  சாசோலைகளை  வழங்கினார். அங்கு  ஒங்கும்  இருந்தார்.

கணபதி  ராவையும்  ஒங்கையும்  தொடர்புகொண்டபோது  தாய்  போலீசுக்குத்  தப்பி  ஓடும்  நபர்  என்பதைக்  கேட்டு  வியப்பு  தெரிவித்தனர்.

“கிளாங் கேட்வே  என்  தொகுதியில்  உள்ளவர்களுக்கு  நிதி வழங்கும்  நிகழ்வுக்கு  என்னை  அழைத்திருந்தனர்”, என  கோத்தா  ஆலம் ஷா  சட்டமன்ற  உறுப்பினரான  கணபதி  ராவ்  தெரிவித்தார்.

“இந்த  டேனியல்  தாய் யார்  என்பது  எனக்குத்  தெரியாது”, என்றவர்  வலியுறுத்தினார்.

ஒங்கைத்  தொடர்புகொண்டபோது, “என்னையும்  நிதி  வழங்கும்  நிகழ்வு  ஒன்றுக்கு  அழைத்திருந்தனர். அங்கு  நான்  பேசியதை  நீங்கள் பார்க்கலாம். யுபுன்  பற்றியோ  யுடோகன் பற்றியோ  நான்  எதுவும்  சொல்லவில்லை”, என்றார்.

ஆகக் கடைசி  நிலவரப்படி, தப்பியோடியவரைப்  பிடிப்பதற்கு தாய்லாந்து  போலீசார்  இண்டர்போலின்  உதவியையும்  மலேசிய போலீசின்  உதவியையும்  நாடியிருப்பதாக  தெரிகிறது.

மலேசிய  போலீசார்  நடவடிக்கை  எடுப்பார்களா?