பெர்மாத்தாங் பாவில் குவான் எங், கஜாங்கில் அஸ்மின்

guanபக்கத்தான்  ரக்யாட்  வேட்பாளர்  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில் காஜாங்  பெர்மாத்தாங்  பாவ்  ஆகிய  இரண்டு  தொகுதிகளுக்கும்  நேரத்தை  ஒதுக்குவது  ஒரு   பிரச்னையாக  இருக்குமா?

கவலையே  வேண்டாம். பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  அலியும்  அவருக்கு  உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.

நேற்றிரவு  பெர்மாத்தாங்  பாவில்  ஒரு  செராமாவில்  உரையாற்றிய   லிம், இடைத்  தேர்தலில்  வான்  அசிசா  வெற்றிபெற்றால்  அவரால்  காஜாங்குக்குப்  போதுமான  நேரத்தை  ஒதுக்க  முடியாது  என்று  அம்னோ  கூறியிருப்பதைப்  புறந்தள்ளினார்.

“…அஸ்மின்  காஜாங்கைக்  கவனித்துக் கொள்வார். பெர்மாத்தாங்  பாவ்  வாக்காளர்களை  நான்  கவனித்துக்  கொள்வேன்”, என்று லிம்  கூற, சுமார்  150 பேரடங்கிய  கூட்டம் கைதட்டி  ஆரவாரம்  செய்தது.

செராமா  முடிந்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அஸ்மின், காஜாங்  சிலாங்கூர்  மாநிலத்தில்  இருப்பதால் அதன்  வளர்ச்சிக்குத்  தாம்  பொறுப்பு  என்றார்.

“அவரின் (வான் அசிசா) அடைவுநிலையில்  திருப்தி  அடைகிறேன். (காஜாங்  சட்டமன்ற  உறுப்பினராக) புதியவராக  இருந்தாலும்  வெள்ளப்  பெருக்கு,  போக்குவரத்து  நெரிசல் போன்றவற்றுக்குத்  தீர்வு  கண்டிருக்கிறார்.”,என்று  அஸ்மின்  கூறினார்.