அம்பிகாவுக்கு போலீஸ் சம்மன்ஸ்

 

ambigasummonedஇன்று முன்னேரத்தில் ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவை விசாரிப்பதற்காக போலீசார் அவரை இன்றிரவு தடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு போலீஸ் அதிகாரி இதனை தமது வழக்குரைஞரிடம் கூறியுள்ளதாக அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நான் இன்னும் சிறிது நேரத்தில் டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு செல்கிறேன். என்னை கைது செய்து ஓர் இரவு தடுத்து வைக்கப் போவதாக போலீசார் எனது வழக்குரைஞரிடம் கூறியுள்ளனர்.

“இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இது ஓர் அமைதியான பேரணி”, என்று அம்பிகா கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடந்த வரி எதிர்ப்பு பேரணியில் 20,000 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பேரணி மாலை மணி 5.30 அளவில் முடிவுற்றது.

டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அம்பிகா கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்ட்டுள்ளார் என்றும் அவருடன் பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன் மற்றும் டிஎபி சிறம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் லத்தீபா கோயா டிவிட்டர் செய்துள்ளார்.

அவர்களைத் தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவுக்கு இன்று மனு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.