பிகேஆர் தேர்தல் இயந்திரத்தின்மீது டிஏபி அதிருப்தி

pauபிகேஆர், பெர்மாத்தாங்  பாவில் அதன்  தேர்தல் இயந்திரத்தைச்  சீர்படுத்திக் கொள்ளாவிட்டால்  தேர்தல்  பரப்புரையினின்றும்  விலகிக்  கொள்ளப்போவதாக  பினாங்கு  டிஏபி மருட்டல் விடுத்துள்ளது.

பரப்புரை  செய்வதற்கு பிகேஆரிடமிருந்து  போதுமான  ஆதரவு  கிடைப்பதில்லை என  பக்கத்தான்  ரக்யாட்டின்  மூத்த  தலைவர்  ஒருவர்  சொன்னார்- அதுவும்  குறிப்பாக  இந்தியர்களிடையே  பரப்புரை  செய்வதற்கு.

பெர்மாத்தாங் பாவில்  உள்ள  கம்போங்  பாகான்  செராயில்  வாழும்  இந்தியர்கள்  பிகேஆர்  தங்களைப்  புறக்கணிப்பதாக  நினைக்கிறார்கள்  என்றாரவர்.

“பரப்புரை  செய்வதிலிருந்து விலகிக்  கொள்ளலாம்போல்  இருக்கிறது. இந்நிலை  தொடர்வது  நல்லதல்ல  என்பதை  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி  இருக்கிறோம். பிகேஆர் ஒழுங்கற்றிருக்கிறது”, என  பினாங்கைச்  சேர்ந்த  அத்தலைவர் மலேசியாகினியிடம்  கூறினார்.

“அவர்கள்  தேர்தல் இயந்திரத்தைச்  சீர்படுத்தி ஒழுங்குபடுத்த  வேண்டும். இந்தியர்களையும்  புறக்கணிக்கக்  கூடாது. இல்லையென்றால்  நாங்கள் விலகிக்  கொள்வோம்”.

இந்திய  வாக்காளர்  எண்ணிக்கை-4083- குறைவாக  இருக்கலாம். ஆனால், நாளுக்குநாள்  போட்டி வலுத்து வரும்  வேளையில்  ஒவ்வொரு  வாக்கும்  விலைமதிப்பற்றது  என்றவர்  சொன்னார்.