மே தினப் பேரணிக்குப் பின்னர் நேற்றிரவு பலர் கைது செய்யப்பட்டதைப் பல்வேறு தரப்பினர் கண்டித்துள்ளனர்.
“பிஎஸ்எம் தலைமைச் செயலாளரும் மே தினப் பேரணி ஏற்பாடுக்குழு உறுப்பினருமான எஸ்.அருள்செல்வன், நெகாராகூ தலைவர் எஸ்.அம்பிகா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் ஆகியோருடன் மேலும் 29 இளைஞர்களும் கைது செய்யப்பட்டது நாட்டில் ஜனநாயகத்துக்காக போராடும் ஆர்வலர்களைத் தண்டிக்க போலீஸ் தலைவர் மேற்கொண்ட ஒரு தீய நடவடிக்கையாகும்”, என ஜெரிட் ஒருங்கிணைப்பாளர் இ.பரமேஸ்வரி கூறினார்.
“ஐஜிபி-இன் நடவடிக்கைகள் தீய நோக்கம் கொண்டவை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
“ஏனென்றால், ஏபரல் 25-இல், அருள்செல்வனும் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவும் டாங் வாங்கி போலீஸ் தலைவர் சைனல் சாமாவைச் சந்தித்துள்ளனர்.
“சைனல், ஏற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார். பிறகு ஏன் கைது செய்ய வேண்டும்?”, என்றவர் வினவினார்.
நேற்று கோலாலும்பூரில் ஜிஎஸ்டி- எதிர்ப்புப் பேரணி அமைதியாகவே நடைபெற்றது. பேரணி மாலை 6.30க்கு முடிந்தது. அது முடிந்து சில மணி நேரத்துக்குப் பின்னர் பலர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய பேரணியில் சுமார் 20,000 பேர் கலந்துகொண்டனர்.
உலகில் வேற எந்த நாட்டிலும் இந்த கொடுமை இல்லை அஞ்சடி BN