அமைதியாக நடந்துமுடிந்த மே தினப் பேரணிக்குப் பின்னர் பலர் கைது செய்யப்பட்டது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கத்தின்மீது மக்களுக்கு ஆத்திரத்தைதான் தூண்டி விட்டிருக்கும் என பெர்சே கூறியது.
“நஜிப் அரசாங்கம் பொருள், சேவை வரியை எதிர்க்கும் மலேசியர்களின் குரலுக்குச் செவிவாய்க்காமல், மேதின ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யுமானால் அது மேலும் எதிர்ப்பைத்தான் சந்திக்க நேரும் என்பதை தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் கூட்டணி(பெர்சே) எச்சரிக்கிறது”.
அவரது அரசாங்கம் “47 விழுக்காட்டு வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது; தேர்தல் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் செய்யும் தில்லுமுள்ளு வேலைகளால்தான் ஆட்சியில் இருக்கிறது” என்பதையும் பெர்சே நஜிப்புக்கு நினைவுறுத்தியது.
“சட்டப்பூர்வ தன்மையைக் குறைவாக பெற்றுள்ள நஜிப், ஜிஎஸ்டி-யை இரத்துச் செய்யக் கோரி மலேசியர்கள் நடத்திய மே தினக் கண்டனக் கூட்டம் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்தது என்பதை அடக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என பெர்சே நிர்வாகக் குழுத் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
கைது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறிய அக்குழு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்தது.
எப்பதான் நம்பிக்கை நாயகன் மீது மக்கள் பூரிப்புடன் இருந்தார்கள் இன்று வெருப்படைவதர்க்கு!.