விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, வாக்காளர்களை “மிரட்டியதன்”வழி தேர்தல் சட்டத்தை மீறினார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது.
அதன் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு வாக்களிக்க வேண்டாம் இஸ்மாயில் சப்ரி வாக்காளர்களை மிரட்டிதாகக் கூறினார்.
நேற்றிரவு பெர்மாத்தாங் பாவில் பேசிய இஸ்மாயில் சப்ரி, “மிரட்டினாரா, கையூட்டு கொடுப்பதாகக் கூறினாரா” என்பதைத் தேர்தல் ஆணையம் புலனாய்வு செய்ய வேண்டும் என நூருல் இஸ்ஸா கேட்டுக்கொண்டார்.
மிரட்டல்களாலும் கையூட்டல்களாலும் இடைத் தேர்தல்கள் களங்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவது இசி-இன் பொறுப்பு என்றாரவர்.
EC UMNO …கியான் நீங்கள் என்ன கொம்ப்லைன்ட் கொடுத்தாலும் கண்டு கொள்ள மாட்டான் துப்பு கெட்ட EC
வெற்றி நிச்சயம் ! மக்கள் GST கடுப்பில் இருக்கிறார்கள் !
ஆம் வெற்றி நிச்சயம்
கவலைப் படாதிங்க அந்த அமைச்சன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது….
கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா EC ஆளும் அம்னோவின் ஏஜண்டு. இவர் எந்த தொகுதி அம்னோ தலையோ !.