வான் அஸிஸாவே பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களின் சிறந்த தேர்வாக இருக்க வேண்டும்

Aziza- utested waterபினாங்கு  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளரான  டாக்டர் வான்  அஸிஸா வான் இஸ்மாயில் பக்காத்தான் எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பிரதிநிதித்து போட்டியிடுகிறார்.  கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரான வான் அஸிஸா, இந்த நாடாளுமன்ற தொகுதியின் ஒரு முன்னாள் உறுப்பினர் என்பது மட்டுமன்றி, காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

 

இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும் தேசிய முன்னணியின் வேட்பாளரான  சுஹாய்மி சாபுடின் மற்றும் பக்காத்தானின் டாக்டர் வான் அஸிஸா இஸ்மாயில் ஆகியோருக்கிடையில்தான்  கடுமையான போட்டி நிலவுகிறது.

 

இந்த போட்டியை வாரிசு அரசியல் என்று சாடுவதும், ஏன் இளையோருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற கேள்வியை பாரிசன் ஆதரவு ஊடகங்கள் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தி வருகின்றன.

 

ஆனால், இளம் கட்சியான கெஅடிலானில் நிறைய  இளைய தலைமுறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு  அளிக்கப்பட்டுள்ளதை மக்கள் கண்டிருப்பார்கள். உதாரணமாக, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கு செபாராங் ஜெயா சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் அபிப் பகுருடின் போன்ற பல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் முன்னணி எடுத்து வைத்துள்ள பல மக்கள் பிரச்சனைகள்  குறித்து  வாக்காளர்களுக்கு  ஒழுங்கானxavier விளக்கத்தை தர முடியாதவர்கள் மக்களை திசைத்திருப்பும் வேலையில் இறங்கியுள்ளனர் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும்,  கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

2019 இல் 115,800 கோடி வெள்ளி கடன்!

 

பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களில் ஒருவர் ஆண்டுக்கு 12  விழுக்காடாக அதிகரித்துவரும் நாட்டின்  கடனால், நாடு 2019ல் 115800 கோடி வெள்ளிக் கடனில் இருக்கும். அப்பொழுது  அது ஒரு திவாலான நாடாக இருக்கும் என்றார். இப்படிப்பட்ட நிலையில் அரசாங்க இலாகாகள் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்கக்கூடாது என்ற உத்தரவு கடிதத்தை பெற்று வருகின்றன. சேம நிதி பணத்தை மீட்கும் வயது வரம்ப்பை உயர்த்த பதிந்துரைக்கப் படுகிறது. அவை அனைத்தும்  நாட்டின் பொருளாதாரம் நலிந்துள்ளதற்கு  சான்று என்கிறார் சேவியர்.

 

இந்தியர்களின் சொத்துடைமை 3 விழுக்காடு உயர்த்தப்படுமா?

 

பிரதமர் நஜிப் அவரது பிரதமர் பதவி காலத்தின் ஆறாவது ஆண்டில் இந்தியர்களுக்கு வாக்களித்த ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகான வாக்குறுதிகளைக்கூட நிறைவு செய்ய முடிய வில்லை! இந்த இக்கட்டான காலக் கட்டத்திலா இந்தியர்களின்  பொருளாதாரத்தை 3 விழுக்காடு உயர்த்தப் போகிறார் என்று வினவுகிறார் சேவியர்.

 

இந்நிலையில் பிரதமர் மகள் திருமண பூ பந்தலுக்கு 3 மில்லியன் வெள்ளிகளா? ஒரே எம்.டி.பியில் 4200 கோடி சூரையாடலா? நாட்டில்  மற்ற சமயங்களுக்களுக்கு எதிரான அம்னோவின் ஆர்பாட்டமா? என்ற திகைப்பில் நாடு மூழ்கிக்கிடைக்கையில் மக்களுக்கு இன்றைய அரசாங்கத்தின் மீது, குறிப்பாக பிதமர் மீது நம்பிக்கை எப்படி வரும்?  அவர் நம்பச் சொல்கிறார். ஆனால், நம்பினால் எல்லாமே நாசமாகிவிடும் என்ற நிலை உருவாகியுள்ளதே என்று சேவியர் குறிப்பிடுகிறார்.

 

நாட்டில் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்குச் சலுகை, இன மற்றும் சமயப் பாகுபாடு, ஊதாரித் தனம், சோம்பேறி தனம், கையாடல், சுரண்டல் போன்ற எண்ணற்ற வழிகளில் நாட்டின் செல்வம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாததாக இருக்கிறது பிரதமரின் தலைமைத்துவம். இவரின் பிரதிநிதிக்கு வாக்களித்தால் என்னவாகும் என்று கேட்கிறார் பிகேஆரின் உதவித் தலைவரான சேவியர் ஜெயக்குமார்.

 

4200 கோடி வெள்ளி கேள்வி!

 

matgமிக முக்கியமாக, கெரிபியன்  தீவில் அரசாங்க அனுமதியுடன் செய்யப்பட்ட 4200 கோடி முதலீடு மீது எழுந்துள்ள பெரிய கேள்வி? இது குறித்து எதிர்கட்சிகள் மட்டும் கேள்வி கேட்கவில்லை. நஜிப்பை பிரதமர் பதவிக்கு சிபார்சு செய்த முன்னாள் பிரதமர்  மகாதீர் கேட்கிறார் பெரும் கேள்விகள். அவர் இட்டுள்ள பட்டியல்படி கணக்கில் வராதது 1400 கோடிகளா?

 

ஆக,  மக்கள் அனுபவிக்கும் விளைவுயர்வு துன்பம், புதிய வரி, பாதுகாப்பின்மை, குற்றச்செயல்கள், குறைவான அடிப்படை ஊதியம், இப்படி அடுக்கடுக்கான கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டதை உணர வேண்டிய வேளையில், இந்த இடைத்தேர்தல் மலேசிய மக்களிடம் மேற்கொள்ளப்படும் ஓர்  இடைக்கால அரசியல் மறுஆய்வாக அமைகிறது என்பது மட்டுமின்றி நாட்டில் ஒரு மாபெரும்  அரசியல் மாற்றத்திற்கான முன்னோடியாக அமைவதை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று சேவியர் கருதுகிறார்.

 

இந்த இடைத்தேர்தலின் முடிவு இந்த நாட்டின் தலைவிதியையே மறுநிர்ணயம் செய்யக்கூடியதாக விளங்கும் என்பதால் பக்காத்தான் ஒரு பலமான வேட்பாளரை இங்கு நிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

 

அநீதியை எதிர்க்கும் திண்மையுடையவர் அஸிஸா

 

உண்மையில், சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பணத்திற்கோ கௌரவத்திற்கோ ஆசைப்பட்டுச் சூடிக்கொள்ளும் மாலையல்ல. இது கடும் போராட்டம் நிறைந்த பெரும் சுமை என்பதனை நன்கு உணர்ந்தவர் வான் அஸிஸா. அதேவேளையில், அநீதியை எதிர்த்து போராட சற்றும் தயங்காதவர், திண்மையுடையவர் டாக்டர் வான்  அஸிஸா என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இந்நாட்டில் அநீதிக்கு எதிராக  கடந்த 18 ஆண்டுகளாக   அவரது கட்சித் தொண்டர்களும், அவரது குடும்பமும் நடத்தும் போராட்டத்தின்PKR - Azizah தொடர்ச்சியில் இது மற்றொரு மைல் கல். இந்த போராட்டம் அன்வார் இப்ராகிமின்  விடுதலைக்கு மட்டுமல்ல, இந்நாட்டு மக்களின் நீதியான அனைத்துக் கோரிக்கைகளுக்குமான, சுரண்டல்களுக்கும் எதிரான,  தொடர் போராட்டமாகும்.

 

கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணியான பக்காத்தானுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்த 51 விழுக்காடு மலேசிய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு பாரிசான் என்ற பீடையை துடைத்தொழிக்க வேண்டும் என்பதாகும். அதனை பக்கத்தானால் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்றாரவர்.

 

கணவரைப் பிரிந்து வாடிய இக்கட்டான சூழ்நிலையிலும், ஒரு குடும்பத் தலைவியாக, ஆறு பிள்ளைகளுக்குத் தாயாக, ஒரு கட்சியின் தலைவராக, போலீஸ் மற்றும் அரசாங்கத்தின் கெடுபிடிகளின் ஊடே கட்சியின் பலதரப்பட்ட விவகாரங்களைக் கவனித்துக்கொண்டு, சிறைக்கும், நீதிமன்றத்துக்கும், மருத்துவமனைக்கும் இடையே அலைந்து திரிந்து எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்தவர் அஸிஸா.

 

தன் கணவர் கொண்ட கொள்கைக்காக, நாட்டுக்காக அவர் மேற்கொண்ட நீதியான போராட்டத்தைத் தடுக்க, அம்னோவின் பாரிசான் அரசாங்கம் தனதிடமிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வஞ்சக வலை விரித்தது. வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தன் கணவர் மீண்டும் தண்டிக்கப்பட்டுள்ளதை மனதார உணரும் எந்த மனைவியும், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.

 

மேலும், அன்று பக்காத்தானின் நிறுவனர்களில் முக்கியமானவரான கர்பால் சிங்  இன்று நம்முடன்  இல்லை. அனைவருக்கும் தலைமை Karpal - Immortality4ஆலோசகராக, குருவாக விளங்கிய கிளந்தான் மந்திரி புசார் நிக் அசிஸ் நம்முடன்  இல்லை. எதிர்க்கட்சிகளின் தலைவராக விளங்கிய அன்வார் இப்ராஹிம் சிறையில், ஆக மிகச் சிக்கலான காலக் கட்டத்தில் பக்காத்தான் இருக்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய சீரிய பணியை சுமந்து இத்தேர்தலில் போட்டியிடுகிறார் அஸிஸா.

 

இவ்வேளையில் மக்கள் முன்னணியான பக்காத்தானை முன்னெடுத்துச் செல்ல, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்தக் கருத்தைத் தோற்றுவிக்க அதிகாரமும், அனுபவமும், மதிப்பும் மிக்க ஒரு தலைவர் தேவை. அதற்கு டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயிலே சிறந்தவர் என்று கட்சியின் உச்சமன்றம் எடுத்த முடிவுப்படி டாக்டர் வான்  அஸிஸா   இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறக்கப் பட்டுள்ளார்.

 

ஆகவே, மலேசிய மக்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அனைத்து பெர்மாத்தாங் பாவ்  வாக்காளர்களும் கெஅடிலான் வேட்பாளரான  டாக்டர் வான்  அஸிஸாவுக்கு வாக்காளிக்க வேண்டும்  என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவரும், கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்