அம்னோ, மசீச குறைகூறலால் எரிச்சலடைந்தார் இஸ்மாயில் சப்ரி

sabriவிவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில் அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப், எதிரணியினர்  தொகுதிகளில்  உள்ள  மக்களுக்கு  உதவுவதில்லை  என்ற  தம்  கொள்கையை  அம்னோ, மசீச  உறுப்பினர்களும்  குறை  சொல்கிறார்களே  என “வருத்தம்”  அடைந்துள்ளார்.

தாம்  சொல்லியதைத்  திரித்துக்  கூறி  விட்டார்கள்  என்றும்  பினாங்கு  அரசாங்கம்தான்  பிஎன்  வசமுள்ள  தொகுதிகளை  ஓரங்கட்டி  வருகிறது  என்றும்  இஸ்மாயில்  சப்ரி இன்று  தம்  முகநூல்  பக்கத்தில்  கூறியிருந்தார்.

“மலேசியன்  இன்சைடர்  என்  பேச்சை  வெளியிட்டிருந்தது. திரித்துக்  கூறுவதே  அவர்களின் வழக்கம். (டிஏபி  தலைமைச்  செயலாளர்) லிம்  குவான்  எங்  முதலிய  எதிரணியினர்  நான்  பாகுபாடு  காட்டுவதாகக்  குற்றம்  சாட்டினர்,

“ஆனால், இதில் வருத்தம்  தரும்  விசயம்,  டிஏபி  போல்  மசீசவும்  என்னைத்  தாக்குவதுதான். அதைவிட  வருத்தம்  தருவது  என்னவென்றால்  அம்னோ  ஆதரவாளர்  பலரும்  சமூக  வலைத்தளங்களில்  என்னைத்  தாக்கியிருப்பது.

“ஏதோ (பிஎன் வசமுள்ள  தொகுதிகளிடம்)  டிஏபி பாகுபாடு  காட்டுவதில்லை  என்பதுபோல்  நடந்து  கொண்டிருக்கிறார்கள்”, என இஸ்மாயில்  சப்ரி  கூறினார்.

டிஏபி,  அம்னோ  மாநில  சட்டமன்ற  உறுப்பினர்களையும்  அவர்களின்  தொகுதிகளையும்  “மாற்றான்  பிள்ளை” போலத்தான்  நடத்துகிறது. அத்தொகுதிகளிலிருது  வரும்  மனுக்களை  அது  ஏற்பதில்லை  என்றாரவர்.