தேர்தலில் போட்டியிட விரும்புவோர் எஸ்பிம் தேர்வில் பகாசா மலேசியா பாடத்தில் குறைந்தது கிரெடிட் பெற்றிருக்க வேண்டும் என்பது சுத்த அபத்தம் என்கிறார் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி(எஸ்யுபிபி)த் தலைவர் டாக்டர் சிம் குய் ஹியான்.
ஆனால், எம்பிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாக எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
“சுத்த அபத்தமாக இருக்கிறது. நாமென்ன கல்விக்கூடமாக நடத்துகிறோம். நன்றாக பேசக் கூடியவர்களும் எழுதக் கூடியவர்களும்தான் நமக்குத் தேவை”.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் எஸ்பிஎம் கிரெடிட் பெற்றிருப்பதை ஒரு தகுதியாக வைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குப் பேர்போன விரிவுரையாளர் ரித்வான் டீ அப்துல்லா முன்வைத்த பரிந்துரைமீது கருத்துரைத்தபோது சிம் இவ்வாறு கூறினார்.
நிச்சயமாக உயர்நிலை கல்வி தகுதி தேவைதான் அனால், ஏன் பஹாசா மலேசியாவில் மட்டும் கிரெடிட் பெற்றிக்க வேண்டும் ? ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் தேவை இல்லையா ? மற்ற மொழிகள் தேவை இல்லையா ? ஒரு இனத்திற்கு மட்டும் புரிந்தால் போதுமா ? இன்னும் கொஞ்சம் காலம் சென்றால், அரபு மொழியில் புலமை வேண்டும் என்பார்களோ? மறுமுறை பஹாசா கு ஜீவா கு என்பார்கள் . இப்படியே இருக்குமாயின் நாளடைவில் மற்ற மொழிகளுக்கு இடம் இருக்காது என்பதனை நன்புவோம், அதற்கு துணை போக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் . நன்றி.
ஜாவி மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் தான் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியும் என்று சொன்னாலும் சொல்லுவார் ‘ultra kiasu’ ரிட்துவான் தீ. இவனெல்லாம் எப்படித்தான் ஒரு பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இருக்கத் தகுதி பெற்றானோ தெரியவில்லை!
ரித்வான் டீ என்பவர் ஓர் மதவாத அரைவேக்காடு. மூவினம் வாழும் நம் மலைநாட்டில், ஒவ்வொரு தொகுதியிலும் மூவினம் கலந்த வாக்காளர்கள் இருப்பது இன்றியமையாதது. ஆகவே, மும்மொழியும் தெரிந்த ஒருவரே வேட்பாளராக முடியும் என ஒரு சட்டம் வந்தால், நம் நாட்டில் மக்களாகிய அனைவரும் மும்மொழியையும் கற்று கொள்ள வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இன, மொழி, மத வேறுபாடுகளும் குறைந்து காணப்படும்.
டி, டி நீ மலாய்காரனாக முயர்ச்சிக்கிறாய்.