பெரும்பான்மை குறைந்ததற்கு என்னைக் குறை சொல்லாதீர்- மகாதிர்

mமுன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ரொம்பின் இடைத்  தேர்தலில்  பிஎன்னின்  பெரும்பான்மை  குறைந்ததற்குத்  தாம் பொறுப்பல்ல  எனக்  கூறியுள்ளார்.

“அங்கு  ஜிஎஸ்டி, வாழ்க்கைச்  செலவின  அதிகரிப்பு, விலைவாசி  உயர்வு  ஆகியவைதான்  முக்கியத்துவம்  பெற்றிருந்தன. 1எம்டிபி (1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்)-க்குக்  கடைசி  இடம்தான்.

“கம்பத்து  மக்களுக்கு  1எம்டிபி  விவகாரம்  புரியாது. ரிம42 பில்லியனை  அவர்கள்  கற்பனை  செய்வது  கடினம்”, என  புத்ரா  ஜெயாவில்  ஒரு  நிகழ்வில்  கலந்துகொண்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்  மகாதிர்  தெரிவித்தார்.

ஜிஎஸ்டி  கவலைதரும் விசயம்  என்றும்  குறைந்தபட்ச  சம்பளத்தை உயர்த்துவது  மக்களின்  பிரச்னைகளுக்குத்  தீர்வாகாது  என்றும்  அவர்  சொன்னார்.

“குறைந்தபட்ச  சம்பளத்தை  உயர்த்தும்போது  வாழ்க்கைச்  செலவுகளும்  அதிகரிக்கின்றன. அதை  மறந்துவிடக்  கூடாது”, என்றாரவர்.

ரொம்பினில்  பிஎன்  எப்போதும்  66 விழுக்காட்டு  வாக்குகளைப்  பெற்று  வந்துள்ளது. ஆனால், நேற்றைய  இடைத்  தேர்தலில்  அதன்  பெரும்பான்மை 40.8 விழுக்காடாகக்  குறைந்தது.