பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் இன்று வாக்களிப்பு நாள். வாக்களிப்பதற்கு 24 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டு காலை மணி எட்டிலிருந்து வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
மாலை மணி 5-க்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்படும்.
அத்தொகுதியில் உள்ள 71,890 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர்தான் வாக்களிக்க வருவார்கள் என தேர்தல் ஆணைய (இசி)த் துணைத் தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா கூறினார்.
“2013 பொதுத் தேர்தலில் 88.50 விழுக்காட்டினர் வாக்களிக்க வந்தனர். அந்த எண்ணிக்கை 80 விழுக்காடாகக் குறையலாம் என இசி எதிர்பார்க்கிறது”.
இடைத் தேர்தல் முடிவு இரவு 9 மணி வாக்கில் தெரிய வரலாம் என்றாரவர்.
பெர்மாத்தாங் பாவில் நான்கு-முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், பிஎன் வேட்பாளர் சுஹாய்மி சபுடின், பார்டி ரக்யாட் மலேசியாவின் அஸ்மான் ஷா, சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகியோர் அங்கு போட்டியிடுகின்றனர்.
இது தெரிந்துதானே வார நாட்களில் தேர்தல் வைத்தது. திரு. சிங்கம் அவர்களே தேர்தல் நிலவரத்தை தெரியப் படுத்துங்கள்.