பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தானா லியா வாக்களிப்பு மையத்தில் பிகேஆர்,, அம்னோ ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கல்லால் அடித்துக் கொண்டனர்.
கைகலப்பும் மூண்டது. அதில் பலர் காயமுற்றனர். சினமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக இரு தரப்புமே ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.
சிலர் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சொன்னார்கள். இசி, தேர்தல் விதிகளின்படி இரு தரப்பு ஆதரவாளர்களையும் 50மீட்டர் இடைவெளி விட்டுப் பிரித்து வைக்கத் தவறிவிட்டதாம்.
முன்னதாக, எஸ்எம்கே குவார் பெராஹு அருகிலும் சிறு சண்டை மூண்டது. அதில் பிகேஆர் ஆதரவாளர் ஒருவர் அம்னோ ஆதரவாளர் ஒருவரை ஓங்கிக் குத்தினார்.
போலீஸ் தலையிட்டு அங்கு சண்டை மோசமாவதைத் தடுத்தனர்.

























