சிங்கப்பூர் கல்விமுறையைப் பின்பற்றுவீர்: ஜோகூர் சுல்தான் அறிவுறுத்து

johorஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்மாயில் ஆங்கிலத்தைப்  போதனா  மொழியாகக்  கொண்ட  சிங்கப்பூரின்  கல்விமுறையைப்  பின்பற்றும்படி   மக்களிடம்  வலியுறுத்தினார்.

ஜொகூர்  சட்டமன்றக்  கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றிய  சுல்தான்,  சிங்கப்பூரின்  கல்விமுறை  அந்நாட்டில் ஒற்றுமையை  வலுப்படுத்துவதில்  வெற்றி  கண்டுள்ளது  என்பதால்  ஜோகூர்  மக்கள்  திறந்த  மனத்துடன்  அதைப்  பின்பற்ற  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார்.

கல்விமுறை  தொடர்ந்து  இனத்தையும்  மொழியையும்  அடிப்படையாகக்  கொண்டிருந்தால்  மலேசியாவின்  பல்லின  மக்களிடையே  எப்போதுமே  ஒரு  இடைவெளி  இருந்துகொண்டே  இருக்கும்  என்றாரவர்.

“ஒரே  கல்விமுறை சிறாரிடையே இன  ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி   வருங்காலச்  சவால்களை  எதிர்நோக்க  இணக்கமான, ஐக்கியமான  சமுதாயத்தை  உருவாக்கும்  என்ற  நம்பிக்கை  எனக்குண்டு”, என்று  சுல்தான்  குறிப்பிட்டார்.