அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், தாபோங் ஹாஜி 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் நிலமொன்றை வாங்கியிருப்பதை மீட்டெடுப்பு என்று கூறும் பிகேஆரின் பாண்டான் எம்பியை ஒரு “கோமாளி” என்று சாடியுள்ளார். அது ஒரு “முதலீடு” என்றாரவர்.
“அரசியல் கோமாளி ஆக இருக்காதீர். முதலீட்டுக்கும் மீட்டெடுப்புக்கும் வேறுபாடு தெரியாதவர் போல நடிக்க வேண்டாம்”, என்று டஹ்லான் எம்பியும் பிகேஆர் தலைமைச் செயலாளருமான ரபிஸி ரம்லிக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்தார்.
முன்னதாக, ரபிஸி டிவிட்டரில் தாபோங் ஹாஜியின் 1எம்டிபி-யை “மீட்டெடுக்கும்” நடவடிக்கை குறித்து ஊராட்சி, வீடமைப்பு அமைச்சரான டஹ்லான் மெளனமாக இருப்பது ஏனென்று கேள்வி எழுப்பி இருந்தார்.


























யார் இங்கே கோமாளி மக்களுக்கு தெரியும்.
ஐயா இங்கு யார் முதலீட்டாளர்? ஐயா அரசாங்கம்(மக்கள்) சொந்த நிலத்தை மிக குறைந்த விலையில் வாங்கி மற்றுமொரு அரசாங்க சார்பு நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்றால் பெரிய வியாபாரமோ? இதை செய்வதற்கு தான் மில்லியன் கணக்கில் செலவு பண்ணி வெளி நாட்டு ஆலோசகர் எல்லாம் அமர்த்தி ஆர்பாட்டமா? இதை நம்ம அடுத்த வீட்டு பட்டம்மா கிட்ட கேட்டா சொல்லுவாங்கள். கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவர்க்கு எங்கையா போனது புத்தி? 1 எம் டி பியில் இந்நாட்டு மக்கள் எல்லோரும் பங்குதாரர்கள்.