தந்தையாருடன் சேர்ந்துகொண்டு 1எம்டிபி பற்றிக் கேள்வி எழுப்புகிறார் முக்ரிஸ்

mukதம்  தந்தையார் டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  போன்று  கெடா  மந்திரி  புசார் முக்ரிஸ் மகாதிரும்  1மலேசியா   மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  குறித்து  கேள்வி  எழுப்பியுள்ளார்.

துன் அப்துல்  ரசாக்  இணைப்பக  நிலத்தை  1எம்டிபி-க்கு மிகக்  குறைந்த  விலைக்கு  விற்றது ஏன்  என்றவர்  வினவியுள்ளார்.

1எம்டிபிக்குச்  சொந்தமான 70 ஏக்கர்  நிலத்தில்  1.56 ஏக்கரை வாங்குவதற்கு  தாபோங்  ஹாஜி  ரிம188.5 மில்லியன்  கொடுத்திருப்பது  அறிந்து  பலரும் சீற்றமடைந்துள்ளனர்.

ஏனென்றால்,  1எம்டிபி  மொத்த 70 ஏக்கரையும்  ரிம194.1 மில்லியனுக்குத்தான்  அரசாங்கத்திடமிருந்து  வாங்கியதாம்.

“1எம்டிபி-க்குச்  சொந்தமான  நிலைத்துக்கு  தாபோங்  ஹாஜி இவ்வளவு  உயர்ந்த  விலை  கொடுக்க  தயாராக  இருக்கும்போது, மேற்படி  நிலத்தை நிதி  அமைச்சு  மிகக்  குறைந்த  விலையில்  1எம்டிபி-க்கு  விற்பனை  செய்ததன்  காரணம்  என்ன?”, என்று முக்ரிஸ்  டிவிட்டர்  பதிவில் கேள்வி  எழுப்பியிருந்தார்.