தாபோங் ஹாஜி 1எம்டிபி-இடமிருந்து வாங்கிய சர்ச்சைக்குரிய நிலத்தை பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப விற்கப்போவதாய் அதன் தலைவர் அப்துல் அசீஸ் ரகிம் தெரிவித்தார்.
தாபோங் ஹாஜி சந்தாதாரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிலத்தை விற்பதற்கு வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது என அசீஸ் கூறினார்.
அதே வேளையில், நிலக் கொள்முதலில் தவறு எதுவும் நிகழவில்லை என்பதையும் பாலிங் எம்பி-ஆன அசீஸ் வலியுறுத்தினார்.
“பிரதமர் இன்று காலை என்னை அழைத்து நிலத்தை விற்குமாறு அறிவுறுத்தினார். மூன்று தரப்பினர் அதை வாங்க ஆயத்தமாக உள்ளனர். அடுத்த வாரம் அதை முடிவு செய்வோம்”, என்றாரவர்.
“நாங்கள் போட்ட முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவோம். ஆதாயமும் கிடைக்கலாம்”, என்று அசீஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஊரான் வீட்டுப் பணம் நஷ்டம் ஆனால் யார் கேட்கப்போகிறார்கள்? ஆதாயத்துக்காக நீங்கள் அலைவதில்லையே!
நில விற்பனையில் …..
ஏதும் பித்தலாட்டம் ….
இல்லாமல் இருந்தால் …..
நல்லது …!!1
உண்மை வெளிவந்து விட்டதால்… வாங்கிய நிலத்தை மீண்டும் விற்கப் போகிறார்களாம்…. இனிமேல் மக்கள் சுதாரித்துக் கொண்டால் சரி.
வாங்கிய நிலத்தை இலாபத்துடன் விற்று அதனை வழக்கமான எலி கடிகள் செய்யாமல் அந்த அமைப்புக்கு முறையாக வரவு வைத்தால் நல்லதுதானே? இதில் என்ன தவறு? தாபூங் ஹாஜியும் இலாபம் ஈட்டி அதன் அங்கத்தினர்களுக்கு கூடிய இலாபப் பங்குக் கொடுக்கக் கடமைப்பட்டு உள்ளதே. KL-லில் நிலத்தில் போடும் காசு நிச்சயம் வீண் ஆகாது. இன்னும் 3, 4 ஆண்டுகள் வைத்து இருந்தால் நிச்சயம் மேலும் அதிக இலாபத்திற்கு விற்கலாம். ஊழல் மன்னரிடமிருந்து அழுத்தம் அதிகம்; உடன் கைகழுவி விட வேண்டிய கட்டாயம்.