துன் அப்துல் ரசாக் இணைப்பு மையத்தில் உள்ள நிலத்தை விற்கப்போவதாக சொன்னதும் வாங்குவோர் உடனே வந்துவிட்டதாக தாபோங் ஹாஜி கூறிக்கொள்வது அதிக விலை கொடுத்து நிலம் வாங்கிய விவகாரம் அம்பலமானதை மூடி மறைப்பதற்காக நடத்தப்படுமா “நாடகமா” என பாஸ் வினவுகிறது.
“தாபோங் ஹாஜியின் அறிவிப்பு வினோதமாக இருக்கிறது.
“தாபோங் ஹாஜிமீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டிருக்கிறார்களே அவர்களை அமைதிப்படுத்த செய்யப்பட்ட அறிவிப்பா அது?”, என் பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார் ஓர் அறிக்கையில் கேட்டிருந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னதால்தான் நிலத்தை விற்கும் முடிவு செய்யப்பட்டதை தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் ரஹிமே ஒப்புக்கொண்டிருக்கிறார் என மாபுஸ் கூறினார்.
இரகசியம் வெளியானதால்தான் தாபோங் ஹாஜி நிர்வாகம் நிலத்தை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது என்றாரவர்.
“அது மட்டும் அம்பலமாகாமல் இருந்திருந்தால் தாபோங் ஹாஜி பணம் மூழ்கும் நிலையில் உள்ள 1எம்டிபி நிறுவனத்தை மீட்பதற்குப் பயன்பட்டிருக்கும்”.
அசீசின் அறிவிப்பு அடிப்படை கேள்விக்கு விளக்கம் அளிக்கவில்லை என்பதையும் மாபுஸ் சுட்டிக்காட்டினார்.
“(அடிப்படை கேள்வி) 1எம்டிபி-யை மீட்டெடுக்க தாபோங் ஹாஜி பணத்தைப் பயன்படுத்துவது ஏன்”, என்றவர் வினவினார்.