அரசாங்கச் சேவைகளுக்குப் பொருள், சேவை வரி கிடையாது என்று பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களிடம் பிஎன் சொல்லிவந்தது உண்மையல்ல என்பது ஜிஎஸ்டிமீது ஜோகூர் சுல்தான் அதிருப்தி தெரிவித்திருப்பதன்வழி அம்பலமாகியுள்ளது எனப் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
அரசாங்கச் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி உண்டு எனக் கூறி முதலமைச்சர் மக்களிடையே தப்பான தகவல்களைப் பரப்பி வருவதாக பினாங்கு பிஎன் தலைவர் டெங் சாங் இயோ குற்றஞ்சாட்டியதை லிம் சுட்டிக்காட்டினார்.
டெங்-கும் பிஎன்னும் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவு. பொதுமக்களும் மாநில அரசும் அரசாங்கச் சேவைகளுக்குக்கூட ஜிஎஸ்டி கொடுக்க வேண்டியிருப்பது கண்டு ஜோகூர் சுல்தான் அதிருப்தி அடைந்துள்ளார் என்றாரவர்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் இஸ்கந்தார், அரசாங்ககச் சேவைகளுக்கும் பணிகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை “அறிவுக்குப் பொருந்தாத செயல்”, என்றார். மக்களுக்குச் சேவை செய்வதுதானே அரசாங்கத்தின் பொறுப்பு என்றாரவர்.
ஊராட்சி மன்றங்களும் மாநில அரசும் வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்க புத்ரா ஜெயாவிடம் அனுமதி கோருமாறு சுல்தான் ஜோகூர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பினாங்கு அரசாங்கமும்கூட மாநில அரசும் ஊராட்சி மன்றங்களும் வழங்கும் சேவைகளுக்கு வரி விலக்குக் கோரி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கடிதம் எழுதியது உண்டு.
“அவப்பேறாக, பிரதமரிடமிருந்து பதில் வரவில்லை”, என லிம் கூறினார்.
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பினாங்கு ஊராட்சிமன்றங்களும் மாநில ஏஜென்சிகளும் ரிம48 மில்லியன் கூடுதல் செலவுகளை எதிர்கொன்டுள்ளன. அவற்றில் ரிம46.3 மில்லியன் ஜிஎஸ்டி வரிக்கும் மீதமுள்ள ரிம1.7 மில்லியன் நிருவாகச் செலவுக்கும் ஆகும் என்று குவான் எங் மேலும் கூறினார்.
இது சம்பந்தமாக ஜோகூர் மாநில அரசு எடுத்துள்ள முடிவை நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஊராட்சிமன்றங்கள் வழங்கும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஜோகூர் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் மாநிலத்திலுள்ள 16 ஊராட்சிமன்றங்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி ரிம3 மில்லியனை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவரு அம்பலப் படுத்தவில்லை. தனது வாணிப வேட்கைக்கு முட்டுக் கட்டை போட்ட நம்பிக்கை நாயகனின் அரசாங்கத்தைச் சாடுகின்றார். அவ்வளவே. எங்கேயாவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவாம இருந்த கதையை கேட்டிருக்கின்றார்கள?.
அநியாயங்கள் தலை விர்த்தாடும் பொழுது மக்களுக்கு எங்கிருந்தாவது உதவி வரும்.
“அரசாங்கச் சேவைகளுக்குப் பொருள் சேவை வரி கிடையாது என்று பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களிடம் பிஎன் சொல்லி வந்தது உண்மையல்ல என்பது ஜிஎஸ்டி மீது ஜோகூர் சுல்தான் அதிருப்தி தெரிவித்திருப்பதன்வழி அம்பலமாகியுள்ளது”
ஏம்பா எது எதுக்கோ கோர்டுக்கு போறீங்க. இந்தப் பிரச்சனையை கோர்டுக்கு எடுத்துச் செல்ல உங்களுக்கும் உங்க கட்சியைச் சார்ந்த வழக்கரிஞர்களுக்கும் போதிய சட்ட ஞானம் தோன்றவில்லையா?. ஏன் இதில் அரசியல் ஏதும் பண்ண முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?. வாய்ப் பேச்சு வீரர்கள்தான் ஜ.செ.க. காரர்கள் என்பதையும் நிருபிக்கின்றீர்கள்.
ஜனநாயக முறையில் பொதுநல வழக்கு தொடரலாமே ஜ செ க ?
ஜொகூர் சுல்தான் செய்ததைப் போல் சிலாங்கூர் சுல்தானும் ஜி.எஸ்.டி. யை அகற்ற முன் வருவாரா…?