தாபோங் ஹாஜி வாரியம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்திடம் நிலம் வாங்கிய விவகாரம் பற்றி இதுவரை கருத்துத் தெரிவிக்காதிருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இப்போது முதல்முறையாக அது பற்றிப் பேசியுள்ளார்.
சாபாவில் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், அச்சர்ச்சை தொடர்வதை விரும்பவில்லை என்றதுடன் அது 1எம்டிபி-யை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல என்பதையும் வலியுறுத்தினார்.
நிலத்தைத் தனியார் துறையிடம் விற்பதன்வழி அந்த யாத்திரிகர் நிதி வாரியம் ஒரே நாளில் பல மில்லியன்களை ஆதாயமாகப் பெற்றிருக்கும் என்றாரவர்.
“அதனால், அது 1எம்டிபி-யை மீட்டெடுக்கும் நடவடிக்கை அல்ல. தனியார் நிறுவனம் எதுவுமே நட்டப்படுவதற்காக எந்தத் திட்டத்தையும் வாங்குவதில்லை”, என்று நஜிப் கூறியதாக பெர்னாமா அறிவித்தது.
அடிச்சாண்டா
பல்லடி
இது சரியான மோதல். கலகம் பிறந்தால்தான் தான் இந்நாட்டிற்கு வழி பொறக்கும். முழு செய்தியும் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.நாஜிப்பு சபாவில் போய்தான் பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் கிழவனுக்கும் நல்ல பதிலடிதான்.
ஒன் மலேசியா ஒன் பல்டி !
பிறகு ஏன் விற்றீர்கள். மக்களிடம் விளக்க வேண்டியதுதானே ….