நேற்றிரவு கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்179 விமானம், “குடிபோதையிலிருந்த” பயணி ஒருவர் செய்த ரகளையால் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கே திரும்பி வந்தது.
“விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மதுமயக்கத்திலிருந்த அப் பயணி மலேசிய விமானப் பணியாளர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.
“உடல் பருத்தவர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்த மற்ற பயணிகளும் விமானப் பணியாளர்களுக்கு உதவினார்கள்”, என எம்ஏஎஸ் ஓர் அறிக்கையில் கூறியது.
அதன் பின்னர் விமானத்தின் பாதுகாப்பையும் பயணிகளின் செளகரியத்தையும் கருதி விமானி விமான நிலையத்துக்கே திரும்பி வர முடிவு செய்தார்.
கேஎல்ஐஏ வந்ததும் குழப்பம் விளைவித்த பயணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவ்விமானம் மறுபடியும் இன்று காலை மணி 10.06க்கு கொழும்பு பயணத்தைத் தொடர்ந்ததாக எம்ஏஎஸ் கூறியது.
இதுவே சென்னைக்கோ அல்லது திருச்சிக்கோ செல்லும் விமானமாக இருந்திருந்தால், அவ்விடங்களுக்கு இனிமேல் MH விமானங்கள் அங்கே போகக்கூடாது என கத்தியிருப்பார், மகாதிமிர். இதற்கு இப்ராஹிம் அலி ஒரு சாலை போராட்டமே நடத்தியிருப்பார்.
நல்லவேளை ஹாஜி யாத்திரைக்கு போகும் பயணிகள் இல்லை ! அப்படி இருந்தால் ! ஐயா சிங்கம் சொல்வது கட்டாயம் நடந்து இருக்கும் !
என்ன வியப்பு என்றால், விமானம் அந்த நிலையிலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்ததாம். அந்த இரண்டரை மணி நேரத்தில் விமானம் தொடர்ந்து தனது இலக்கான கொழும்புவை சென்று சேர்ந்திருக்கும். பிரட்சினையை ஏற்படுத்திய பயணியை கோலா லம்பூரில் நடவடிக்கைக்காக சம்பந்தம்பட்ட அமைப்பிடம் ஒப்படைத்தது போல கொழும்பு விமான நிலைய பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்திருக்கலாமே. மற்ற பணிகளும் உரிய நேரத்தில் தமது இலக்கை அடைந்திருப்பார். நான் அனைத்துலக கண்கானிப்பாறல்ல. ஆக இந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது வான் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வோம். இல்லையேல் அந்த முடிவினை செய்தவரின் திறமை கேள்வி குறியே. விவேகமான முடிவுப்படி ஒரு அதிகாரி செயல்பட அனுமதி இருந்தால், இந்த முடிவை எடுத்த அதிகாரியின் முடிவெடுக்கும் திறமையும் கேள்வி குறியே. நான் ஒரு சாதாரணமானவன். எனது தெளிவின்மையை யாராவது போக்க உதவுனால் நன்றியுடைவனாக இருப்பேன். நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.