ஜிஎஸ்டி வருமானம் பயன்படுத்தப்படும் விதத்தை அரசு விளக்கும்

gst pmபொருள், சேவை  வரி  மூலம்  கிடைக்கும்  கூடுதல்  வருமானம்  எப்படிப் பயன்படுத்தப்படுகிறது  என்பதை  அரசாங்கம்  விளக்கும். இன்று  காலை  பிரதமர்  துறை  பணியாளர்களின்  கூட்டத்தில்  உரையாற்றியபோது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இந்த    வாக்குறுதியை  வழங்கினார்.

அந்த  வரியால்  உருவான மிகப்  பெரிய  சர்ச்சையை அடுத்து பொதுமக்களின்  நம்பிக்கையைப்  பெறும் முயற்சியாக  பொறுப்பற்ற  முறையில் விலைகளை  உயர்த்துவதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றும்  ஜிஎஸ்டி-யால்  கிடைக்கும்  வருமானத்தைப்  பயன்படுத்தப்படுவது தொடர்பில்  வெளிப்படைத்தன்மை  கடைப்பிடிக்கப்படும்  என்றும் நஜிப்  சொன்னார்.

“பொதுமக்களுக்கு  விவரங்கள்  வழங்கப்படும். கூடுதல்  வருமானம்  மக்களுக்கும்  நாட்டுக்கும்  நன்மையளிக்கும்  வகையில்  பயன்படுத்திக்கொள்ளப்படும்”, என்றாரவர்.

ஜிஎஸ்டி செயலாக்கத்தில்  சீரமைப்புகள்  செய்யப்படும்  என்றும்  பிரதமர்  கூறினார். சீரமைக்கப்பட்ட  பின்னர்  மக்கள்  நிச்சயமாக  அதை  வரவேற்பார்கள்.