தாபோங் ஹாஜி, 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்திடமிருந்து அதிக விலைக்கு நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியுள்ள வேளையில் பணி ஓய்வு நிதி நிறுவனமும் அதே இடத்தில் நிலம் வாங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி ஓய்வு நிதி நிறுவனம் ( KWAP) துன் ரசாக் இணைப்பு மையத்தில் ஒரு நிலத்தை வாங்குவதற்கு ஒப்புகொண்டு அதற்கான ஆவணமொன்றில் கையொப்பமிட்டிருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. நிலத்தின் விலை தாபோங் ஹாஜி கொடுத்ததைவிட 15 விழுக்காடு குறைவாம்.
கையெழுத்திடப்பட்டது நிலத்தை வாங்குவதற்கு ஒப்புக்கொள்ளும் ஆவணம்தான். நிலக் கொள்முதல் ஒப்பந்தம் இன்னும் செய்துகொள்ளப்படவில்லை.
KWAP சதுர அடிக்கு ரிம2,300 கொடுத்து அந்த நிலத்தை வாங்கி அங்கு அதன் தலைமையகத்தைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாக ஸ்டாரின் செய்தி கூறியது.
அது இப்போது யாயாசான் துன் ரசாக்கில் வாடகைக்கு இருந்து வருகிறது.