இன்று நடைபெறும் அம்னோ கூட்டத்தில், தொகுதித் தலைவர்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் பதவி விலகுமாறு “நயமாக”க் கேட்டுக்கொள்வார்கள் என முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் கூறியுள்ளார்.
“நஜிப்புக்கு மக்களின் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
“இன்று பிற்பகல் நடக்கும் கூட்டத்தில் அவர்கள் நஜிப்பிடம் நயமாகவும் நாகரிகமாகவும் இதை எடுத்துரைப்பார்கள்”, என சைனுடின் அவரது வலைப்பதிவில் கூறினார்.
நீர் சொன்னவுடன் எல்லோரும் தப்பாமல் செய்துவிடுவார்கள்.எப்படி ஐயா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். வாயிக்கும் மூலைக்கும் சம்பந்தம் இல்லாமல்.
நஜிப்பாவது பதவியை ராஜினாமா செய்வதாவது. பைத்தியக்காரத்தனமான பேச்சு. தற்போது GST வாயிலாக அரசாங்கம் கொள்ளை லாபமடைகிறது. ரோசம்மாவிற்கு ‘டபுள்’ சந்தோசம். தற்போது மக்களின் வரிப் பணத்தில் உலகை சுற்றுகிறார். இனிமேல் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் பறந்தாலும் பறப்பார். நஜிப், ராஜினாமா, அது, இது, என உளறிவிட்டு வீட்டுக்கு வந்தாரேயானால், அப்புறம் ரோசம்மாவிடம் விளக்குமாறுதான். ஆமா, சொல்லிப்புட்டேன்.