கெடாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து தவிர்க்கும் முஸ்லிம்கள் 2014ஆம் ஆண்டு ஷியாரியா சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர்.
வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பவர்கள் பற்றி பொதுமக்கள் கெடா இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடம் புகார் செய்யலாம்.
குற்றவாளிகளுக்கு மூன்று மாதச் சிறையும் ரிம1,000வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ஜூன் முதல் நாளிலிருந்து அச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முஸ்லிம் ஆண்களில் பலர் சமயக் கடமைகளைப் புறக்கணிப்பதாக முறையீடுகள் வருவதாகவும் இச்சட்டம் அதைத் தடுக்கும் என்றும் அவர் சொன்னார்.
எந்த மதத்தையும் புரிந்து சந்தோசமாக பின் பற்ற வேண்டும். அதை விடுத்து கட்டாயப் படுத்தினால்…
Mr.james! மற்றவர் மதப் பிரச்சினைகளில் நாம் தலையிடுவதோ அல்லது கருத்தை சொல்வதோ ஆரோக்கியமான செயலன்று. அதே வேளை,அதே மாநிலத்தில் Gunung Jerai என்ற குன்றின் மீது நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருந்து ஓர் ஹிந்து ஆலயத்தை அரசாங்கம், ராணுவத்தை கொண்டு தகர்த்தெறிந்தது, பதினான்காம் நூற்றாண்டில், கடாரத்தை ஆண்ட சோழ மன்னர் சாம் ராஜ்யத்தின் அடையாள சின்னங்களை, சமீப காலத்தில் அழித்த இந்த அரசு செயல்களை கண்டியுங்கள்.
முடிந்தால் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக நாடு முழுவதும் அறிவித்து விடுங்கள் எந்த அரசு துறையுளும் வெள்ளிக்கிழமை எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது