டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது குறிவைக்கிறார்.
ரோஸ்மாவை பற்றி தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக கூறிய மகாதிர், அவற்றுள் ஒன்று அவர்தான் பிரதமர் என்பது போல் நடந்துகொள்வதாகும் என்றார்.
அவரை பற்றி புகார் கூறியவர்கள் மலாய்க்காரர்களும் அம்னோ உறுப்பினர்களும் மட்டுமல்ல, சீனர்களும் அதில் அடங்கும் என்றார்.
“நஜிப்பின் துணைவியாரின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறை மற்றும் அவர்தான் பிரதமர் போல் நடந்துகொள்ளும் முறை பற்றி அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை”, என்று மகாதிர் அவருடைய மிக அண்மைய வலைத்தள பதிவில் கூறியுள்ளார்.
நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளதோடு அது குறித்து ஏதாவது செய்யுமாறு தம்மை வற்புறுத்தியுள்ளனர் அவர் கூறிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தாம் நஜிப்புக்கு ஆலோசனை கூறியதோடு கண்டித்தும் உள்ளதாக கூறிய மகாதிர், அவை பயனற்றதாக இருக்கிறது என்றார்.
“அவர் (நஜிப்) பணம் கொடுப்பது மக்களை இணங்க வைக்கும் என்ற அவருடைய போக்கில் நம்பிக்கையுடையவராக இருக்கிறார். மக்கள் அவரை நேசிக்கின்றனர் என்று அவர் உண்மையிலேயே நம்புகிறார்.
“ஏதாவது செய்யுங்கள் என்று தம்மிடம் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். நான் செய்துள்ளேன், ஆனால் அதனால் பலன் ஏதும் இல்லை என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.
மகாதிருக்கு என்னுடை முழு ஆதரவு
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது!. இப்ப பாம்பு ரோஸ் அக்கா, மாமக்தீர் கருடன். இந்நாட்டின் முதல் பெண்மணியின் பண வலிமை தெரியாமல் அசைத்துப் பார்க்க முயற்சிக்கின்றார் மாமக்தீர். பாவம் கையை சுட்டுக் கொள்ளப் போவது மாமக்தீர்தான். மாமக்தீர் அரசாட்சியில் பிரதமர் பதவிக்கு ஏற்படுத்திக் கொடுத்த அரண் இன்று நம்பிக்கை நாயகனை பதவியில் நீடித்திருக்க வைத்திருக்கின்றது. இது முன்வினை செய்யின் பின் விளையும் என்பதன் விளைவு. .
பாம்புக்கும் கழுகுக்கும் சண்டையாம், மாட்டிகிட்டது பரமசிவன் கொண்டையாம்! இதனாலே மக்கள் என்ன பாடு பட போறாங்களோ! எல்லாம் சிவமயம்..
இந்த முன்னாள் பிரதமர் மகாதிமிர் ஒரு அருமையான கோழை போல் தென்படுகிறார். நம்ம ரோசம்மா செய்வது சரியில்லை என்றால், அல்லது முறையற்ற வகையில் மக்கள் பணத்தையோ அல்லது அதிகாரத்தையோ கைப்பற்றியுள்ளார் என்றால், ரோசம்மாவை வழக்கு மன்றத்திற்கு இழுக்க வேண்டியதுதானே. கோழை, கோழை. நாட்டின் பிரதமாராக உள்ள நஜிப்பே நம்ம ரோசம்மாவின் சுண்டு விரலை அசைக்க முடியாத போது, இந்த மகாதிமிர் எம்மாத்திரம்.
எம் பாட்டுக்கு பின் பாட்டு பாடினது நல்லாயிருக்கு சித்தன்.
எல்லாம் முடிந்து ரோஸ்மாவிடாம இனி கோவணம் தான் மிஞ்சும் பொறுத்திருந்து பாப்போம் .
ரொம்ப அருமையா எதார்த்தம் சித்தன் அவர்களே…. !!!
தேனீ ஐயா, தங்களை மகிழ்விக்க அந்த பரமசிவன் பாடிய பின்பாட்டு அது..நான் வெறும் அணு,அசைப்பது அவர் செயல்..
ஈஈஈஈஈஈஎ
ஊஊஊஊஊ
இது தெரியாதா ,ரோச்மாஹ் டான் இப்ப பிரதமரு ,,அவளுக்கு வக்காலத்து வாங்குது MIC முண்டைங்க