ரோஸ்மா என்ன, அமைச்சரவைக் கூட்டத்துக்கா தலைமை தாங்கினார்?

rizalபிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  அமைச்சரவைக்  கூட்டத்துக்குத்  தலைமை  தாங்கியது உண்டா? மாட்சிமை  தங்கிய  பேரரசருக்கு  ஆலோசனைகள்  சொன்னதுண்டா?

பிரதமரின் உதவியாளர்   ரிசால்  மன்சூரை  மலேசியாகினி  தொடர்பு  கொண்டபோது   இப்படிக் கேள்விக்  கணைகளைத்  தொடுத்தார்.

ரோஸ்மா தாமே  பிரதமர்  என்பதுபோல்  நடந்து  கொள்கிறார் என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியிருப்பது  பற்றிக் கேட்டதற்கு  ரிசால்  இப்படிக்  கேள்விகளாலேயே  பதிலளித்தார்.

“ரோஸ்மா  பிரதமர் போன்று  நடந்துகொள்வதாக  சிலர்  கூறுகிறார்கள். எனக்கு  அப்படித்  தெரியவில்லை……அவர்  அமைச்சரவைக்  கூட்டத்தில் கலந்து கொண்டாரா  அல்லது  அதற்குத் தலைமை  தாங்கினாரா?

“அமைச்சர்களுக்கோ  தலைமைச்  செயலாளருக்கோ  அவர் உத்தரவு  பிறப்பித்தது  உண்டா? பேரரசருக்கு  அவர்  ஆலோசனை கூறியது  உண்டா?”. இப்படிக்  கேள்விகளை  அடுக்கிக்கொண்டே  போனார்  ரிசால்.