பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங். எதிரணியின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
“அவர் அழுத்தங்களால் துவண்டுவிடக்கூடாது. பிரச்னைகளைத் தீர்க்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்”.
“அவர் பதவி விலகக் கூடாது. அவரது பதவிக் காலத்தை முடிக்க இடமளிக்க வேண்டும்”, என்றவர் கோலா திரெங்கானுவில் கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் தெரிவித்துள்ளது..
இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே !!!!
பணம் பத்தும் செய்யும். துருக்கியில் ஆரம்பித்த பேரம் இன்னும் முடியவில்லை போலும். இவர் தான் ஒரு மதவாதி என்று சொல்வதை விட கையாலாகாத கபோதி என்று சொல்லிக் கொள்வது மேல். GST -யும் 1MDB -யும் பார்த்து மலேசியாவே ஒட்டு மொத்தமா அராசாங்க தலைவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று சொல்லுது. இவரோ, தலைவரை தலை மேல தூக்கி வச்சிகிட்டு ஆடு ரோஸ் ஆடு என்று ஆடுறாரு!. பாஸ் கட்சிக்கு ஓர் அவமானச் சின்னமாகி விட்டாரோ?.
பாஸ்கட்சி யின் தலைமையின் ஒரு வரலாறு தொரோக சின்னம் .
ஒன்றும் அறியாத கிணற்றுத் தவளை கொண்ட தலைவர் பாஸ் தலைவிதி !
GE14 லில் இந்த PAS கட்சியை முதலில் ஒலித்து கட்டுவோம் ,உம்னோ காரனைவிட படும் கேவலமானவனுங்க இவனுங்க
இப்படி ஒரு எதிர் கட்சி தலைவரை உலகம் பார்த்ததுண்டா ? தோக் குரு நிக் அசிஸ் இல்லாமல் போனதால் ஹடிக்கு குளிர் விட்டு போய்விட்டது !
பாஸ் கட்சி இரண்டாக பிளக்கும்
நேரம் நெருங்குது ம.இ க வை
சாமிவாலு உடைத்தது போன்ற
நாடகம் அரங்கேறும்!
ஏன் இவ்வுலகில் யாவரும் இன்புற்றிருக்கவேண்டும் என்று இம் மானிட ஜென்மகளுக்கு தெரிய வில்லை? இவ்வுலகில் பிறந்த யாவருக்கும் அந்த உரிமை இருக்கின்றது. உனக்கு பிடிக்காவிட்டால் தூர போ! ஆண்டவனிருந்தால் அவனுக்கு தெரியும்- ஏன் காழ்ப்புணர்ச்சி? யாவரும் மகிழ்வுடன் இருப்பதை பாத்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே?
நஜிப், பிரதமராக நீடித்திருந்தால் அம்னோவின் பலம் குறைந்துக்கொண்டு போகுமே தவிர,மீண்டும் பலப்படாது,நஜிப் இப்போது உடுப்பை இழந்தவன் கைப்போல,இவன்
தொடர்ந்து ஆட்சி புரிந்தால்,கூட்டனி கட்சிக்குதான் சாதகம். உதாரணத்திற்கு ரொம்பின் இடைத்தேர்தலில் BN முன்பை விட இப்போது 50% வாக்குகளை இழந்ததை உணரலாம். ஹாடி அரசியல் தெரியாதவர் என்று எடை போட்டுவிடாதிர்கள்.
தமிழர் நந்தா,ஹடியை பற்றி பேச உனக்கு தகுதி இல்ல…………….
அரசியல் கோணத்தில் பார்க்கப் போனால், ஹாஜி ஹடி அவங் கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நஜிப் தொடர்ந்து பிரதமராக இருந்தால்தான், அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஆட்சியை கைப்பற்ற முடியும்.