ஆறாண்டுக்கால இழுபறிப் போராட்டத்துக்குப் பின்னர் அரசாங்கம் காலஞ்சென்ற தியோ பெங் ஹொக்-கின் குடும்பத்துக்கு ரிம600,000 இழப்பீட்டுத் தொகை வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது.
இரு தரப்பும் கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த சமரசத்துக்கு உடன்பட்டதாக கூலாய் எம்பி தியோ நை சிங் தெரிவித்தார்.
“முறையீட்டு நீதிமன்றம் தியோவின் இறப்புக்கு எம்ஏசிசி தான் பொறுப்பு என்று தீர்ப்பளித்தை அடுத்து அந்த ஆணையம் இந்த இழப்பீட்டை வழங்க முன்வந்தது”, என்றாரவர்.
2009 ஜூலை 15-இல், சாட்சியமளிப்பதற்காக மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்குச் சென்ற தியோ, மறுநாள் ஷா ஆலமில் உள்ள எம் ஏம்ஏசிசி தலைமையகத்தின் 14-வது மாடியிலிருந்து விழுந்து இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அப்படியென்றால் தியோ பெங் ஹோக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உருதிப்படுதப்பட்டுள்ளது.ஆனால் கொலையாளிகள் யார்?அவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி கொண்டிருப்பது யாருடைய தயவால்? அந்த கொலையாளிகளை தேடி பிடித்து தண்டிக்க போலீசும் சட்டத்துறை அலுவலகமும் தனது கடமையை செய்யுமா?
தியோ பெங் ஹோக் மரணத்திற்கு கிடைத்த இந்த இழப்பீட்டு தொகை கிடைத்ததற்கு, போராட்டம் நடத்தியதே ஒட்டு மொத்த ஜனநாயாக செயல் கட்சிதான். அதிலும் பாதிப்புக்குள்ளானவர் சீனர் என்பதே முழுமுதற் காரணம். இதுவே ஒரு தமிழனாக இருந்தால் எட்டிக் கூட பார்க்காது, இந்த ஜ.செ.க. எத்தனையோ தமிழ் மக்கள் சிறைகளிலும், பொது இடங்களிலும், அரசினால் கொல்லப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இருந்துள்ளனர். இதில் எத்தனை பேருக்கு வக்காலத்து வாங்கினது இந்த ஜ.சே.க? சீனர்களுக்கு பிரச்சினை என்றால் துண்டை காணோம் துணியை காணோம் என பின்னங் கால் பிடரியில் அடிக்க ஓடும் ஜ.சே.க. தமிழர்களுக்கு ‘நஹி’. முன்பு, பட்டு, டேவிட் இருந்த காலத்தில் ஓரளவு தமிழர்களின் பக்கம் தலை சாய்த்ததுண்டு. இப்போது பூஜ்யம். ராமசாமி, குலசேகரன் போன்றோரை கருவேப்பிலையாக பயபடுத்துகிறது, ஜ.சே.க. இவர்களையும், குறை சொல்வதற்கில்லை, பாவம், சீன எஜமானர்களின் சொல்படி நடந்தாக வேண்டும், இல்லையேல், சீட் கிடையாது.
நீதிபதிக்கு பின்னால் பார்க்கலாம், கண்ணை கட்டிகொண்டுஇருக்கும் சிலை ஒன்றை நமது திரைபடங்களில் …. அதன் அர்த்தம் புரியாத இனம் நம் நாட்டில் அதிகமாக உள்ளது, அதேபோல காவல் துறையும் இது வரையில் நடுநிலையாக இருந்தது இல்லை நீதி நிலைநாட்டிட நம் மண்ணில் பல வழக்குகளில்.
இவைகளில் இருந்து தப்பிடாலும் அனைத்து இனங்களுக்கும் இறைவன் என ஒருவன் இருக்கிறான், அவரை நம்புவோமாகுக.நன்றி.
“14-வ14-வது மாடியிலிருந்து விழுந்து இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
“14-வ14-வது மாடியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்யப்பட்டு கிடக்கக் காணப்பட்டார்.
இப்படி எழுதுங்கப்பா ,காச வாங்கிட்டீங்களா அம்நோகிட்டே ?
சொந்தமா நடந்து போயா விழுந்தாரு ,தமிழ் எழுத்திலும் வீரம் இருக்கோணும் .
ஐயா கரிகாலரே நீதி செத்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது.