நெகிரியில் மசீசவுக்கு நிலம் ‘இலவசமாகவே’ கிடைக்கிறது

negeriநெகிரி  செம்பிலானில்  அரசாங்க  நிலமொன்று  சதுர அடி  2சென்  என்ற  விலையில் மசீச-வுடன்  தொடர்புள்ள  ஒரு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டிருப்பதாக டிஏபி-இன்  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லொக்  தெரிவித்தார்.

மலாய்க்காரர்களுக்காக  ஒதுக்கப்பட்ட  அந்த  9.83 ஹெக்டர் நிலத்தை  ரிம24.853-க்கு  விற்பதற்கு  மாநில  அரசு 2001-இல்  ஒப்புதல்  அளித்தது  என்றாரவர்.

“அதாவது 1.05மில்லியன்  சதுர  அடி  கொண்ட அந்நிலம்  சதுர  அடிக்கு  2சென்  விலையில்  விற்கப்பட்டிருக்கிறது”, என்று அவரை மேற்கோள்காட்டி  சைனா  பிரஸ்  அறிவித்துள்ளது.

செண்டிபீட்  மலையில்  தென்  ட்ஸே  கோயிலுக்கு  அருகில்  உள்ள  அந்த  நிலத்துக்கு  சதுர  அடிக்கு 2சென் என்பது  மிகவும்  குறைந்த விலையாகும்.  விலையைப்  பார்க்கையில் அது  ‘இலவசமாகவே  கொடுக்கப்பட்டதற்கு  ஒப்பாகும்’ என்றாரவர்.

அந்த  நிலம் மினாங்  தியாரா சென்.பெர்ஹாட்டுக்கு  விற்கப்பட்டதை  மாநில  அரசு  உறுதிப்படுத்தியது. அது  ஒரு ரிம2 நிறுவனமாகும்.

அதன் இயக்குனர்களில்  மூவர்  மசீச தலைவர்களின்  உறவினர்கள்  அல்லது  நெருங்கிய  நண்பர்கள்  என்றும்  லொக்  கூறினார்.