அமைச்சரவை மாற்றம் நிகழப்போவதாகக் கூறப்படுவதையும் அதன் தொடர்பில் சமூக வலைத்தளங்கலில் வலம் வரும் பெயர்ப் பட்டியலையும் பிரதமர் அலுவலகம்(பிஎம்ஓ) மறுத்துள்ளது.
அப்பெயர்ப் பட்டியல் ஐந்து அமைச்சர்கள் பதவி இழப்பார்கள் என்பதைக் காண்பித்தது.
“அமைச்சரவை மாற்றம் நிகழப்போவதாகக் கூறப்படுவதை பிஎம்ஓ மறுக்கிறது” என அந்த அலுவலகம் இன்று பிற்பகல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.
இப்போதைய அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என்பதையும் அது வலியுறுத்தியது.
நேற்று இணையத்தில் வலம் வந்த ஒரு பட்டியல் அமைச்சர்கள் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அனிபா அமான், ஜமில் கீர் பஹாரோம், இட்ரிஸ் ஜாலா, ஷகிடான் காசிம் ஆகியோர் பதவி இழப்பார்கள் என்று கூறிற்று.
டேய் ,உங்களுக்கு தைரியம் இருந்தால் ,இரண்டு ரம்புத்தான் இருந்தால் ஆட்சிய கலைங்க்கடா பார்ப்போம்
மாற்றம் இல்லை என்று மறுத்தால். அவங்க மொழியில் மாற்றம் வரப் போகுதுன்னு அர்த்தம்.
அமைச்சரவை மாற்றத்தால் என்ன நன்மை ? அரசாங்கத்தையே மாற்ற வேண்டும் !
நான் வேண்டுமானால் ஒரு சிறு ஆலோசனை சொல்கிறேன் , எல்லா இந்திய அமைச்சர்கள் ,துணை அமைச்சர்கள் யாவரையும் தூக்கிபோட்டுவிட்டு , 10000 ஏழை இந்திய இழையவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பினை கொடுத்தால் , இவர்களை நம்பி இருக்கும் எத்தனையோ ஆயிரம் அவர்களது சொந்த பந்தங்கள் பிளைதுகொள்ளும் ! இரண்டு மூன்று அமைச்சர்களின் சுகவாழ்வுக்காக நாம் ஏன் பாடுபடவேண்டும் ? ஊர் சிரிக்க அடித்துகொள்ளும் இவனுங்க, நம் சமுதாய உயர்வுக்காக சாதித்தது ஒன்றும் இல்லை.
அமைச்சரவை மாற்றம் வேண்டாம்…மக்கள் அரசாங்கத்தையே மாற்றும் நாள் விரைவில்..!