போலீஸ் காவலில் இருந்தபோது போலீஸ் அதிகாரி ஒருவர் தம்மைக் கற்பழிக்கப் போவதாக மிரட்டினார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர் மைசாரா அமிரா முகம்மட் அஸ்மாடி, விசாரணையை விரைவுபடுத்த கோலாலும்பூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
மே 1 பேரணியில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டு டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் தம்மைக் கற்பழிக்கப் போவதாக ஒரு அதிகாரி மிரட்டினார் என மைசாரா கூறினார்.
“கோலாலும்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவரைத் தொடர்பு கொள்ளுங்கள். விசாரணையை விரைவாக நடத்த மைசாராவையும் அழைத்து வாருங்கள்”, எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், மைசாராவின் வழக்குரைஞர் ஜி.சிவமலருக்கு டிவிட்டரில் செய்தி அனுப்பியிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காலிட் தெரிவித்தார்.
பெண் எதிப்பாளர்களை மிரட்டுவதற்கு எளிய வழியைப் போலிசார் கண்டு பிடித்திருக்கின்றனர். நஜிப்பின் அரசாங்கத்தில் பெண்களுக்குத் தான் பாதுகாப்பில்லை. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.
BN ஆட்சியில் இதுவெல்லாம் சகஜம் தானே,நல்ல வேலை C4 வைக்கவில்லை.