ஊராட்சி மன்றங்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்குமாறு சிலாங்கூர் கோரிக்கை விடுக்கும்

azmசிலாங்கூர்  அரசு  அம்மாநிலத்திலுள்ள  12  ஊராட்சி  மன்றங்களுக்கும் அவை  வழங்கும்  சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யிருந்து  விலக்களிக்குமாறு புத்ரா  ஜெயாவைக்  கேட்டுக்கொள்ளும்.

இன்று  மாநில ஆட்சிக்குழுவில்  அது  பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் ஜிஎஸ்டி  விலக்களிக்குமாறு  நிதி  அமைச்சிடம்  கோரிக்கை  விடுப்பதென  முடிவு  செய்யப்பட்டதாகவும் மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார்.

இப்போதைக்கு  ஜிஎஸ்டி-யை  மாநில  அரசு  ஏற்றுக்கொள்ளும்  சாத்தியத்தை  மாநில  பொருளாதாரத்  திட்டப்  பிரிவு ஆராயும்.

“சிலாங்கூரில்  12 ஊராட்சி  மன்றங்கள்  இருக்கின்றன. பினாங்கில்  இரண்டுதான்.

“மாநில  அரசே (ஜிஎஸ்டியை) ஏற்பதாக  இருந்தால்  அதனால்  ஏற்படும்  நிதித்  தாக்கத்தை  ஆராய  வேண்டியது  அவசியமாகும்”, என்றாரவர்.

இதுவரை  பினாங்கு,  திரெங்கானு, ஜோகூர்  ஆகிய  மூன்றும் ஊராட்சி  மன்றச்  சேவைகளுக்கு  விதிக்கப்படும்  ஜிஎஸ்டி-யைத்  தாங்களே  ஏற்க  முடிவு  செய்துள்ளன.