முஸ்லிம் யாத்திரிகர் நிதியைப் பராமரிக்கும் நிறுவனமான தாபோங் ஹாஜி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்திடம் (1எம்டிபி) நிலம் வங்கியதைக் கடுமையாகக் குறைகூறி வருபவரான டாக்டர் மகாதிர் முகம்மட், உம்ராவை நிறைவேற்ற மெக்கா சென்றிருக்கிறார்.
1எம்டிபி பிரச்னைகளைப் பயன்படுத்தி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நாளை அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியுடன் நாடு திரும்புகிறார்.
நாடு திரும்பும் அவரை வரவேற்க சுபாங் ஸ்கைபார்க் வருமாறு மலேசியர்களை அழைக்கும் குறுஞ்செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
அக்குறுஞ்செய்தி, “மே 15, வெள்ளிக்கிழமை பிற்பகல் மெக்காவிலிருந்து திரும்பும் துன் மகாதிரை வரவேற்போம். தூற்றப்பட்டாலும் அவமதிக்கப்பட்டாலும் நாட்டுக்காக போராடி வருபவர் துன். பிரிம் உதவித் தொகை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவரை வரவேற்க, வாரீர் சுபாங் ஸ்பார்க்”, என்று கூறியது.
திருடனை திருடன் சாப்பிடுறாண்ட தம்பிப் பயலே. இதைச் தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ! இவனை நம்பி நடுத்தெருவில் நிற்காதே தமிழா!.
துன் மகாதீர் இனரீதியாக பாகுபாடு பார்த்து 23 ஆண்டுகாலம் செய்த ஆட்சியின் பிரதிபலிப்பே, துன் அஹ்மட் படாவி ஆட்சியின் போது ஹிண்ட்ராப்பின் தலைமையில் மக்களின் உரிமை போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தின் போது மக்களை காட்டுமிராண்டி தனமாய் போலீசாரும் குண்டர் கும்பலும் ஆவேசமாக தாக்கினர், அதன் விளைவாக துன் அஹ்மட் படாவியின் தலைமையில் ஆட்சி செய்த பாரிசன் நேசனல் முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததோடல்லாமல் சில மாநிலங்களின் ஆட்சியையும் இழந்தது. இவ்வளவும் நடக்க காரணமாய் இருந்தவர் துன் மகாதீர் அவர்களே. அவரை வரவேற்பதற்கு எந்த தமிழனும் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்ற அடிப்படையில் அம்னோகாரர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு அசிங்கப்பட்டுக்கொள்வார்கள். நாம் சும்மா வேடிக்கை பார்த்தால் போதும், நம்மை வந்தேறிகள் என்று தானே சொல்கிறார்கள், மலாய்காரர்கள் மட்டும் தானே இந்த மலேசியாவின் பூமி புத்திராக்கள். நாம் தமிழர்களாகவே இருப்போம்.
சரியாகச் சொன்னீர்கள் ரமலா.
மகாதிரின் அறிவை பாராட்டுகிறேன் ,மலேசியாவை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர் ,ஆட்சியை சிறப்பாக நடைதினார்கள் , இவருடைய கொள்கைக்கு ஏற்ப பொழைக்க டேரியாதவனுங்கதான் இவரை குறை சொல்லுவானுங்க ,அதுவும் நம்ம வீர தமிழர்கள்
உணர்வுள்ள தமிழன் புறிந்து கொள்வான்.இன உணர்வை தூண்டி விட்டு வேஷம் போடும் முள்ளமாரி தலைவன்கள் தேவையில்லை.
இவனை வரவேற்பது, அஞ்சடி கோத்தபாயா ராஜபக்சேயை வரவேற்பதற்கு சமம். அப்படி என்ன தமிழர்களுக்கு இந்த மகாதிர் துரோகம் செய்தான் என்று கேற்கிரீர்களா ? 20 சதவீதம் அரசாங்க வேளையில் இருந்த நம் இனத்தை சாமிவேலோடு சேர்ந்து பறித்துக்கொண்டான் ! இன்று நாம் ஒரு சதவீதம் அரசாங்க வேலையில் மிஞ்சுவோமா தெரியவில்லை .
துன் மகாதீர் இனரீதியாக பாகுபாடு பார்த்து 23 ஆண்டுகாலம் செய்த ஆட்சியின் பிரதிபலிப்பே, துன் அஹ்மட் படாவி ஆட்சியின் போது ஹிண்ட்ராப்பின் தலைமையில் மக்களின் உரிமை போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தின் போது மக்களை காட்டுமிராண்டி தனமாய் போலீசாரும் குண்டர் கும்பலும் ஆவேசமாக தாக்கினர், அதன் விளைவாக துன் அஹ்மட் படாவியின் தலைமையில் ஆட்சி செய்த பாரிசன் நேசனல் முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததோடல்லாமல் சில மாநிலங்களின் ஆட்சியையும் இழந்தது. இவ்வளவும் நடக்க காரணமாய் இருந்தவர் துன் மகாதீர் அவர்களே. அவரை வரவேற்பதற்கு எந்த தமிழனும் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்ற அடிப்படையில் அம்னோகாரர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு அசிங்கப்பட்டுக்கொள்வார்கள். நாம் சும்மா வேடிக்கை பார்த்தால் போதும், நம்மை வந்தேறிகள் என்று தானே சொல்கிறார்கள், மலாய்காரர்கள் மட்டும் தானே இந்த மலேசியாவின் பூமி புத்திராக்கள். நாம் தமிழர்களாகவே இருப்போம். (சரியான கருது)
துன் மஹாதீர் காலத்தில்தான் இந்தியர்கள்தானத் தலைவர் உதவியுடன் அரசாங்க வேலைகளில்லிருந்து ஓரம்கட்டப்பட்டனர் இந்தியர்களுக்கு கல்வி ,உத்யோகம் போன்ற போன்றவற்றிற்கு “கோட்டா” முறையை பயன் படுத்தி முடக்கியவர் இன்பகுபாடு பூமி புத்திரா சலுகை போன்ற கெடுபிடி எல்லாம் அவர் காலத்தில்தான் அப்போது நானும் அரசாங்க ஊழியர்தான் !