மாட் சாபு: திடீர் தேர்தல் வந்தால் பிஎன் புட்டுக்கொள்ளும்

sabu matபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  நாடாளுமன்றத்தைக்  கலைத்து  திடீர் தேர்தலை  நடத்தினால்  வெற்றி  பக்கத்தான்  ரக்யாட்டுக்குத்தான் என்கிறார்  பாஸ் துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு.

பெர்மாத்தான்  பாவ், ரொம்பின்  இடைத் தேர்தல்  முடிவுகள்  அவருக்கு இந்த நம்பிக்கையைக்  கொடுத்துள்ளன.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்  புத்ரா  ஜெயா  எங்கள்  கைக்கு  வந்து  விடும். இந்த  நம்பிக்கைக்குக்  காரணம்  பெர்மாத்தாங்  பாவ். அங்கு  பக்கத்தானின்  பெரும்பான்மை 9,000-தான்.  வாக்காளர்  எண்ணிக்கை  குறைந்திருந்தது  இதற்குக்  காரணம்”. மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  முகம்மட்  சாபு  இவ்வாறு  தெரிவித்தார்.

மாட் சாபு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முகம்மட்  சாபுவுக்கு  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி), பொருள், சேவை  வரி (ஜிஎஸ்டி) தாபோங்  ஹாஜி  1எம்டிபி-இடம்  நிலம்  வாங்கியது  முதலியவை  பக்கத்தான்  வெற்றிக்கு  உதவும்  என்றார்.

“கம்பத்து  மக்களுக்கு  1எம்டிபி  புரியாது. ஜிஎஸ்டி  புரியும். தாபோங்  ஹாஜி  நல்லாவே  புரியும்.

“தாபோங்  ஹாஜி விவகாரம் மட்டும்  பெர்மாத்தாங்  பாவ்  தேர்தலுக்கு  இரண்டு  நாள்களுக்குமுன்  வெளிவந்திருந்தால்  பிஎன் தோல்வி  இன்னும்  மோசமாக இருந்திருக்கும்”, என்றார்.