‘பிரதமரை வறுத்தெடுக்கிறார்கள், 1எம்டிபி வாரியம் என்ன செய்கிறது?’

reezal1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தைப்  பீடித்துள்ள  பிரச்னைகளுக்கு பிரதமர்  அப்துல்  ரசாக்கை  மட்டுமே  பொறுப்பாக்குவது  நியாயமல்ல  என  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  ஒருவர்  கூறினார்.

அந்நிறுவனத்தின்  இயக்குனர்  வாரியம்  பொறுப்பேற்க  முன்வர  வேண்டும்..

1எம்டிபி  நிறுவனம்  தொடர்பான  விவகாரங்கள்  ஒவ்வொன்றாக  வெளிவந்தபோது  விளக்கமளிக்கத்  தவறியது  வாரியத்தின்  தவறாகும்  என்று  ரீஸால்  கூறினார்.

“நீண்டகாலம்  விடையளிக்கப்படாமல் விடப்பட்டதால் அது  அரசாங்கத்தின்  நற்தோற்றத்துக்குக்  களங்கத்தை  ஏற்படுத்தி  விட்டது”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“ஒரு  நிறுவனத்தின்  நிர்வாகத்தில் மிகப்  பெரிய  பொறுப்பு  வகிப்பது  அதன்  வாரியம்தான். ஆனால், இந்த (1எம்டிபி)  வாரியம்  என்ன  செய்து  கொண்டிருந்தது.

“எல்லாவற்றுக்கும்  பிரதமர்மீது  பழி  போடுவது அபத்தம். அவரைத்  தண்டிக்க  விரும்புகிறார்கள், வேறொன்றுமில்லை”, என  கப்பாளா  பத்தாஸ்  எம்பி-ஆன ரீஸால்  கூறினார்.

விவகாரங்கள்  ஒவ்வொன்றாக வெளிவந்து  எல்லாவற்றுக்கும்  நஜிப்  பொறுப்பு  என்பதுபோல்  அவர்  பலருடைய  குறைகூறல்களுக்கு ஆளாகி  வரும்  வேளையில் 1எம்டிபி  விளக்கம்  எதுவும்  அளிக்காமல்  மெளனம்  காத்து  வருகிறது.

பிரதமர் தலைமைக்  கணக்காய்வாளரின்  புலனாய்வுக்கு  உத்தரவிட்டிருப்பதால் கணக்குத்  தணிக்கை  முடிவு  தெரியும்வரை  அது  மெளனத்தைக்  கலைய  விரும்பவில்லை போலும்.