அமைச்சர்களின் அரசியல் செயலாளர்களும் தனிச் செயலாளர்களும் வருமானத்துக்குமீறிய வாழ்க்கை வசதிகளுடன் வாழ்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை அடுத்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
எம்ஏசிசி பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினார். அதற்காக அவர்கள்மீது உடனே நடவடிக்கை எடுத்துவிட முடியாது.
“அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம். எம்ஏசிசி சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அதிரடிச் சோதனை நடத்திட முடியாது. ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் வேண்டும்”, என்றவர் விவரித்தார்.
அதனால்தான் சந்தேகத்துகுரியவர்கள் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்கக் கட்டாயப்படுத்தும் புதிய சட்டம் தேவை என்று ஆணையம் கூறி வருகிறது.
அம்னோவின் ஊழல்களை புத்தகங்களாக எழுதி அடுக்கி உயரம் பார்த்தால் umno கட்டிடத்தை விட புத்தகங்கள் உயரமாகத்தான் இருக்கும்.புதிய சட்டமும்,பழைய சட்டசபையும் எந்த பயனும் தரபோவதில்லை .ஒரே தீர்வு புதிய அரசாங்கம்.