முன்னாள் அமைச்சர் புதுக் கட்சி தொடங்கினார்

ikatanமுன்னாள்  தகவல் அமைச்சர்  அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர், Parti Ikatan Bangsa Malaysia(ஈக்காத்தான்)  என்ற  பெயரில்  புதிய  கட்சி  ஒன்றைத்  தொடங்கியுள்ளார். அது  மக்கள்- ஆதரவுக்  கட்சி என்றவர்  கூறிக்கொண்டார்.

“ஈராண்டு  போராட்டத்துக்குப்  பின்னர்  நீதிமன்ற  ஆணையின் உதவியுடன்  ஈக்காத்தான்  ஒருவழியாகப்  பதிவாகியுள்ளது”, என காடிர்  ஸ்ரீகெம்பாங்கானில்  அக்கட்சியின் தொடக்கவிழாவில்  கூறினார். சுமார் 300 பேர்  அதில்  கலந்துகொண்டார்கள்.

தம்  கட்சி பிஎன்னுக்கு ஆதரவாகவோ  எதிரணிக்கு  ஆதரவாகவோ  செயல்படாது  என்று  கூறிய  காடிர்,  தேச  தந்தையர்களின் உணர்வுகளையும் நாட்டின்  வருங்காலத் தலைமுறையினரின்  அவாக்களையும்  கருத்தில்கொண்டு  அது  செயல்படும்  என்றார்.

இப்போதைக்கு 2018 பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்  நோக்கம்  கட்சிக்கு  இல்லை  என்றாரவர்.

பின்னர், செய்தியாளர்  கூட்டத்தில்  அது  பற்றி வினவியதற்கு தேர்தலில்  போட்டியிடுவது பற்றி நேரம்  வரும்போது  முடிவு  செய்யப்படும்  என்றார்.