சரவாக்கில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
சரவாக்கில் இப்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்கு மட்டும் முடக்கப்பட்டுள்ளது.ஆனால், மேலும் பல அரசியல்வாதிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக எம்ஏசிசி-இன் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள்தானா என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்தார்.
ஆனால், மற்ற வட்டாரங்களிடமிருந்து ஒபராசி கெர்காஜி பற்றி மலேசியாகினிக்குத் தகவல் கிடைத்தது. ஊழலுக்கும் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதற்கும் எதிரான ‘ஓப்பராசி கெர்காஜி’ நடவடிக்கையின்கீழ் பல சட்டமன்ற உறுப்பினர்கள்மீதும் 405 வங்கிக் கணக்குகள்மீதும் புலனாய்வு நடைபெறுகிறதாம்.
சபா,சரவக்கில்தான் இப்படி செய்ய முடியும் தீபகற்பகத்தில் நடக்கிற தில்லு முல்லுகளுக்கு செய்ய முடியுமா?தடுத்தா இயற்கை வளங்களை பாதுகாக்கலாமே?இயற்கை பேரிடர்களை தடுக்கலாமே ?
இக்கரையில் …..
உள்ள ….
சோற்றுக்கு…..
அலையும் எமது …..
அரசியல் …..
கௌதாரிகள் ….
எப்போது ……!!!!!!
கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம். இதுக்கெல்லாம் பெரிய தலை ஒன்னு உயரத்துல சரவாக்கிலேயே உக்கார்ந்து இருக்கு. என்ன பண்ண போறீங்க. மறுபடியும் தலைய விடு வாலை புடிக்கிறானுங்க.