படகு மக்கள் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வழியோ பினாங்கும் அவ்வழியே

boatபடகுமக்கள் விவகாரத்தை  அரசியல்  ஆதாயமாக்கிக்கொள்ள  பினாங்கு  அரசு  விரும்பவில்லை. அதைத்  தேசிய  பாதுகாப்பு  விவகாரமாகவே அது  பார்க்கிறது.

முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  மலேசிய கடல்  எல்லைக்கு  அருகில்  படகுமக்கள்  கடலில்  சிக்கிக்கொண்டு  தவிக்கும்  விவகாரம் கூட்டரசு  அரசாங்கத்தின்  அதிகாரத்துக்கு   உள்பட்டதாகும்  என்றார்.

இதுபோன்ற  தேசியப்  பாதுகாப்பு  விவகாரங்களில்  பினாங்கு  கூட்டரசு  அரசாங்கத்தை  ஆதரிக்கிறது. இந்த  விவகாரத்தில்  ஒரு  மாநில  முதலமைச்சராகத்தான்  தம்மால்  கருத்துரைக்க  முடியுமே  தவிர  எதிரணி  அரசியல்வாதியாக பேச  முடியாது  என்றாராவர்.

பினாங்கு  சட்டமன்றத்தில்  பேசிய  லிம், ஸ்ப்ரேட்லி  தீவுகள்  மீதான  சர்ச்சையில்கூட  தாம்  மலேசியாவின்  நிலைப்பாட்டையே  ஆதரிப்பதாகக் கூறினார்.

அப்படியானால்,  படகுமக்கள்  நாட்டின்  கடலோரத்துக்கு  வராமல்  தடுத்து, எரிபொருள், உணவுப்பொருள்  கொடுத்து,  படகுகளைத்  திருப்பி  அனுப்பும்  கூட்டரசு  அரசாங்கத்தின்  கொள்கையை   ஆதரிக்கிறாரா  என்று   அவரிடம், “நான்  அப்படிச்  சொல்லவில்லை”, என்றார்.

“என்ன  நடவடிக்கை  எடுத்தாலும்  அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் வழங்கப்பட  வேண்டும்”,  என  லிம்  கூறினார்.