இராமசாமி: இந்தியர்களுக்கான ரிம3 பில்லியன் எங்கே போயிற்று?

 

Ramasamayonallocationof3millionஇந்தியர்களின் மேம்பாட்டிற்காக நிதி அமைச்சு கிட்டத்தட்ட ரிம3 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டால் இந்திய சமூகம் பயனடைந்ததா என்று பினாங்கு மாநில அரசு அறிய விரும்புகிறது.

2012 ஆண்டிலிருந்து 2015 வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும்  அந்நிதி என்னவாயிற்று என்று பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் II இராமசாமி கோரினார்.

இராமசாமியின் அறிக்கைப்படி, நிதி அமைச்சருமான நஜிப் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக ரிம2.8 பில்லியனை 2012-2014 ஆண்டுகளுக்கிடையிலும், ரிம260 மில்லியனை 2015 லும் ஒதுக்கியிருக்கிறார்.

இந்த ஒதுக்கீட்டிற்கு தமிழ் நாளிதழான மலேசிய நண்பன் முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டிருந்தது. அந்நாளிதழ் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இர்வின் செரிகர் அப்துல்லாவை மேற்கோள் காட்டி அவர் அளித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தது என்று இராமசாமி இன்று பினாங்கு சட்டமன்ற கட்டடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Ramasamayonallocationof3million1அது ம இகாவுக்கு போய் விட்டதா?

“இது எங்களுக்கு வியப்பளிக்கிறது ஏனென்றால் அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது”, என்றாரவர்.

அப்பணம் இந்திய இளைஞர்கள், மகளிர் தொழில்முனைவோர்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஒரு கல்வி நிதி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படுவதாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

“ஆனால், அந்தப் பணம் எங்கே? அது மஇகாவுக்கு போய் விட்டதா? யாரோ ஒருவர் அதைக் கடத்தி விட்டாரா? எந்த அமைப்புக்கு நஜிப் அந்தப் பணத்தைக் கொடுத்தார்?

“அந்தப் பணம் என்ன ஆயிற்று மற்றும் அதனால் இந்திய சமூகம் பலனடைந்த்ததா என்று நஜிப் கூறுவார் என்று நாம் நம்புகிறோம்”, என்று இராமசாமி கிண்டலாகக் கூறினார்.