@KINIயில் “உலக ஊடக விழா”, கலந்து கொள்ள வாரீர்

 

kiniworldpressfestival1உலக ஊடக சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டதை அடுத்து நாளை ( மே 16) “உலக ஊடக விழா” கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கெராக்கான் மீடியா மாரா (கெராம்) மலேசியாகினியுடன் இணைந்து செய்கிறது. இவ்விழாவில் ஊடக சுதந்திரம் பற்றிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ஃபதி அரிஸ் ஒமார் கூறுகிறார்.

இவ்விழாவில் இரு கருத்தரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றில் ஸுல் ஃபிக்கிரி ஸாமிர் போன்ற இளம் எழுத்தாளர்கள் பங்கேற்பர். மற்றொன்றில் த எட்ஜ்ஜின் ஆசிரியர் டெரன்ஸ் பெர்னான்டிஸ் மற்றும் அஸ்ட்ரோ அவானியின் அஸாம் ஷாய்ரி போன்றோர் பங்கேற்கின்றனர். இவற்றுடன் மேலும் பல நிகழ்ச்சிகளும் அவ்விழாவில் இடம்பெறுகின்றன.

kiniworldpressfestival2விழாவின் இறுதிக் கட்டமாக “The Company You Keep” என்ற படம் திரையிடப்படும்.

போக்குவரத்து வசதி உண்டு

இந்த ஒரு நாள் கொண்டாட்டம் மலேசியாகினியின் புதிய அலுவலகக் கட்டடம் @kINI யில் kiniworldpressfestival3பிற்பகல் மணி 2.00 லிருந்து நடைபெறும். கட்டணம் ஏதும் இல்லை. போக்குவரத்துக்கு மலேசியாகினி ஏற்பாடு செய்துள்ளது.

விழாவில் கலந்துகொள்பவர்களின் போக்குவரத்துக்கு பிற்பகல் மணி 1.30 லிருந்து இரவு மணி 11.00 வரையில் தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்திலிருந்து வருவதற்கும் திரும்பிச் செல்வதற்கும் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இவ்விழாவுக்கு அனைவரையும் திரண்டு வருமாறு கேட்டுக் கொண்ட ஃபதி அரிஸ் ஒமார், “ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல. அதற்கு பொதுமக்களும் சமுதாயமும் ஒன்றிணைந்து ஊடகச் சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்”, என்றார்.

இவ்விழாவுக்கு சிலாங்கூர் மாநில கலாச்சார குழுவும், சிஐஜே என்ற மலேசிய சுயேட்சை ஊடகத்திற்கான மையமும் ஆதரவு அளித்துள்ளன.