சரவாக்கில் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தும் பணியைத் திரும்பவும் செய்ய வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையம் (இசி) மேல்முறையீடு செய்யுமெனத் தெரிகிறது.
இதன் தொடர்பில் இசி-யிலும் சட்டத்துறைத் துறை அலுவலகத்திலும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. அவர்கள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
“அனேகமாக, மேல்முறையீடு செய்வோம்”, என ஒரு வட்டாரம் தெரிவித்தது. தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அது விரும்பவில்லை.
நேற்று, கூச்சிங் உயர் நீதிமன்ற நீதிபதி இயு ஜென் கை, பத்து லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் சீ ச்சீ ஹாவ், பாராம் வாக்காளர் ஒருவர் ஆகியோருக்குச் சாதகமாக தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்து அதைத் திரும்பவும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதன்வழி இப்போது 71-ஆக உள்ள சட்டமன்ற இட-எண்ணிக்கை 82-ஆக உயர்த்த இசி திட்டமிட்டிருந்தது.
EC யை மலேசியா மக்கள் செருப்பால அடிக்கணும் அதே சமயம் BN நக்கிகளையும் செருப்பால மக்கள் அடிக்கணும்