நஜிப்: அது பேங்க் நெகாராவின் யோசனை; அரசியல் நோக்கம் அதற்கில்லை

najib1மலேசியா  மக்கள் உதவித்  திட்டம்(ப்ரிம்) வாக்காளர்களைக்  கவரும்  ஒர்  அரசியல்  தந்திரம் என்று  கூறப்படுவதை மறுத்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அது  தம்முடைய  யோசனை  அல்லவென்றும்  அது பேங்க்  நெகாராவின்  யோசனையாகும்  என்றும்  தெரிவித்தார்.

“நான்  அதற்குப்  பரிந்துரைக்கவில்லை. பரிந்துரைத்தது  நிதிக்  குழுவும் பேங்க்  நெகராவும்  ஆகும். அது  கொண்டுவரப்பட்டது  வாக்குகளை  வாங்குவதற்காக  அல்ல, மக்களுக்கு  உதவுவதற்காக”, என்று பிரதமர்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.