ரொஹின்யா விவகாரத்தில் நஜிப்பின் பேச்சில் உள்ள வேகம் செயலில் இல்லை

rohinரோஹின்யா  அகதிகள்  விவகாரத்தில்  தாய்லாந்து  ஒரு  சந்திப்புக்கு  ஏற்பாடு  செய்துள்ளது. பார்க்கப்போனால் ஆசியான்  தலைவரான  மலேசியாதான்  அப்படிப்பட்ட  நடவடிக்கை  முன்னின்று  எடுத்திருக்க  வேண்டும். ஆனால், எடுக்கத் தவறிவிட்டது  என  பாஸ்  கட்சி  சாடியுள்ளது.

“மனிதநேயத்துக்கு ஒரு  மோசமான  நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. மலேசியா இதற்கு  உருப்படியான  தீர்வு  காண  வேண்டும்.

“ஆசியான்  தலைவர்  என்று  மார்தட்டிக்கொண்டு  நம்  எல்லையில் நிகழும்  விவகாரத்துக்குத் தீர்வுகாண  முடியாமல்  இருப்பதில்  பயனில்லை”, என  பாஸ்  தகவல்  தலைவர்  மாபூஸ்  ஒமார் இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ஆசியான்  தலைவர்  என்ற  முறையில்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  ஆசியான்  தலைவர்களிடையே  அவசரக்  கூட்டம்  நடத்தி  ரொஹின்யா  முஸ்லிம்களை ஒடுக்கும்  நடவடிக்கைகளை  நிறுத்திக்கொள்ள  மியான்மாருக்கு  அழுத்தம்  கொடுக்க  வேண்டும்  என  பொக்கோக்  சேனா  எம்பி-யுமான மாபூஸ்  கேட்டுக்கொண்டார்.