முகைதின்: மியான்மார் ரோஹின்யா பிரச்னையை நம்மீது சுமத்தக் கூடாது

dpmமியான்மார்  ரோஹின்யாக்களின்  பிரச்சனைக்கு  உள்ளுக்குள்ளேயே  தீர்வு  காண  வேண்டுமே  தவிர  ஆசியான்  அண்டைநாடுகளிடம்  அதைத்  தள்ளிவிடக் கூடாது  என்று  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின் கூறினார்.

சிலாங்கூர், கிளன்மேரியில்  செய்தியாளர்களிடம்  பேசிய  முகைதின்  இவ்விவகாரம்  சிக்கலானது  என்றார்.

“வருகின்றவர்கள் இங்கு  வரவேற்கப்படுகிறார்கள்  என்ற  தப்பான  சமிக்ஞையை  நாம்  காட்டிவிடக்கூடாது. அதன்பின்னர் ஆயிரக்கணக்கில்  வருவார்கள், வியட்நாம்  போரின்போது  நிகழ்ந்ததுபோல”, என்றாரவர்.

மியான்மாரில்  ஒடுக்குமுறைக்கும்  வன்செயல்களுக்கும்  அஞ்சித்  தப்பியோடும் ரோஹின்யா  அகதிகள்  தங்கள்  நாட்டுக்குள்  வருவதைத்  தடுத்து  தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா  ஆகியவை  அவர்களை  திருப்பி  அனுப்பி  வருகின்றன.

இப்படித்  திருப்பி  அனுப்பப்பட்டவர்கள், 6,000-இலிருந்து 8,000 பேர்வரை கடலில்  சிக்கித்  தத்தளிப்பதாக  மதிப்பிடப்படுகிறது.