7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் அசிசா

mpநாடாளுமன்றத்தின்  இரண்டாவது கூட்டத்தொடர்  இன்று தொடங்கியபோது  புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்பிகள்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில் (பிகேஆர்- பெர்மாத்தாங்  பாவ்), ஹசான்  அரிப்பின் (பிஎன் -ரொம்பின்) ஆகிய  இருவரும்  எம்பிகளாகப்  பதவி ஏற்றனர்.

அவர்களின்  பதவியேற்புச் சடங்கு  மக்களவைத் தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  முன்னிலையில் நடந்தது.

அசிசா  எதிரணித்  தலைவராகவும்  இருப்பார்  என  பண்டிகார்   அறிவித்தார்.

பக்கத்தான் கட்சிகள்  அதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாக  அவர்  தெரிவித்தார்.

நாடாளுமன்றம்  இன்று தொடங்கி ஜூன் 18வரை நடக்கும். வியாழக்கிழமைக்குள் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  11வது  மலேசியத்  திட்டத்தை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்வார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.